சூர்யாவுடன் மோதும் அஜித்! வேற லெவல் சம்பவங்கள் காத்திருக்கு!

சூர்யாவுடன் மோதும் அஜித்! வேற லெவல் சம்பவங்கள் காத்திருக்கு!
X
அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி கதையில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்கள் படப்பிடிப்பு துவங்கவே மே 1ம் தேதி ஆகிவிடுமாம். 6 மாத கால வேலைகள் படத்துக்காக திட்டமிடப்பட்டிருப்பதால் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில்தான் படமே முடியும் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருக்கும் பிறகு விஜய், அஜித், சூர்யா எனும் மூன்று பேரும் மிகப் பெரிய பிஸினஸ்ஸை கையில் வைத்திருக்கும் நடிகர்களாக இருக்கின்றனர். அவ்வப்போது சூர்யா விஜய், அஜித் இருவரையும் ஓவர்டேக் செய்வதும், பின்தங்குவதுமாக இருந்து வருகிறார். இந்த போட்டியில் விஜய், அஜித்துடன் சூர்யாவும் மோதி வருகிறார்.

ஒரு காலத்தில் அஜித், விஜய் இருவரும் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போது சூர்யா ஓவர்டேக் செய்து ஓடிவந்துகொண்டிருந்தார். ஆனால் விஜய்யும் அஜித்தும் தங்களது பிஸினஸ்ஸை வேறு லெவலுக்கு உயர்த்தும்போது சூர்யாவால் அதனை செய்யமுடியாமல் போய்விட்டது. காரணம் அடுத்தடுத்து தோல்விப் படங்களைக் கொடுத்தார் சூர்யா.

இப்போது மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறார் சூர்யா. இப்போது சூரரைப் போற்று, ஜெய்பீம் என இரண்டு தொடர் வெற்றிகளைக் கொடுத்து அடுத்ததாக சூர்யா 42 படத்துக்காக காத்திருக்கிறார். சூர்யா 42 படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் அப்செட் ஆகும் வகையில் ஒன்று நடந்துள்ளது.

அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி கதையில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், அவர்கள் படப்பிடிப்பு துவங்கவே மே 1ம் தேதி ஆகிவிடுமாம். 6 மாத கால வேலைகள் படத்துக்காக திட்டமிடப்பட்டிருப்பதால் அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில்தான் படமே முடியும் என்று கூறப்படுகிறது. தீபாவளி இல்லையென்றால் பொங்கல் இடையில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அஜித் நினைக்கிறாராம். இதனால் பொங்கலுக்கு சூர்யா 42வுடன் மோதவிருக்கிறது அஜித்குமார் 62.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அந்த படம் பெற்றுத் தந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் த செ ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் தலையைக் காட்டினார் சூர்யா. அப்போதி்லிருந்து அவர் ரோலெக்ஸாக மிளிர்ந்து வருகிறார். ஐந்து நிமிடங்கள் வந்தாலும் மக்கள் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். அதே கதாபாத்திரத்தைக் கொண்டு விக்ரம் பார்ட் 2 வரும் எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்துக்கு மிகப் பெரிய வியாபாரம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை சூர்யாவின் சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் 10 மொழிகளில் வெளியிடப்படவிருக்கிறதாம். இதனால் டிஜிட்டல் ரைட்ஸும் மிகப் பெரிய தொகைக்கு விலை போயிருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோஸ் நிறுவனம் இதனை மிகப் பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் டீசர் ஒன்று தயாராகி இருக்கிறதாம். இதனை வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டரோடு சேர்த்து டைட்டில் லுக்கும் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சூர்யா பிறந்த நாளுக்கு மிகப் பெரிய அப்டேட் ஒன்று காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, அஜித்குமார் பிறந்தநாளான மே 1ம் தேதி அதிகாரப்பூர்வ ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என்றும் படத்தின் பெயரும் அன்றைய தினமே வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி