நடிகர் சூர்யா 42 படத்தின் டைட்டில் என்ன?
சூர்யா (பைல் படம்).
Suriya 42 title announcement update- அண்ணாத்த படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் தலைப்பிடப்படாத புதிய படத்தில் நடிக்கிறார் சூர்யா. 'சூர்யா42' என அழைக்கப்படும் இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாக உள்ள படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வடிவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.
மோஷன் போஸ்டரை பொறுத்தவரை படம் மன்னர் கால கதையை அடிப்படையாக கொண்டு போர், வீரம், உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாக இருப்பதாக தெரிகிறது. பிரமாண்ட செட்டுகள் அமைத்து வரலாற்று பின்னணியில் படத்தின் கதை இருக்கும் என யூகிக்க முடிகிறது. இருப்பினும், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதில் சூர்யா, ராஜா கெட்டப்பில் நடித்து உள்ளார். எனவே படத்தின் தலைப்பு வேள்பாரியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. 2 ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் வெளிநாடுகளில் துவங்க உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக சூர்யா 42 படத்தின் முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu