கங்குவா படத்தில் சூப்பர் அப்டேட்! இது வேற லெவல் ஆச்சே!

கங்குவா படத்தில் சூப்பர் அப்டேட்! இது வேற லெவல் ஆச்சே!
X
சூர்யாவின் 42வது திரைப்படமான கங்குவா படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது

சூர்யாவின் 42வது திரைப்படமான கங்குவா படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் சூர்யாவின் 42 வது படமான கங்குவா தற்போது கொடைக்கானலில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக இணைந்திருக்கும் இந்த படம் இந்திய அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்த படம் குறித்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. | kanguva movie latest update

சூரரைப் போற்று, ஜெய்பீம் என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்து வரும் சூர்யாவின் அடுத்த படமான கங்குவா நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை ருசிக்க காத்திருக்கிறது. அந்த அளவுக்கு மிகச்சிறந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் கோவாவில் நடைபெற்றது. | kanguva movie update today

கோவாவில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிகிறது. இதற்கு முன்னதாக அடர்ந்த காடுகளில் சில காட்சிகளைப் படமாக்க வேண்டியிருந்தது. இதனால் படக்குழு முதலில் தாய்லாந்து மாதிரி வெளிநாடுகளில் எடுக்கலாமா என்று யோசித்திருந்ததாம். ஆனால் இந்தியாவிலேயே எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டு இப்போது கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஷூட்டிங் நடைபெற்று வருகின்றதாம். | suriya 42 full movie download

கொடைக்கானலின் தாண்டிக்குடி பகுதியில் அடர்ந்த காடுகளில் படத்தின் ஷூட்டிங் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஷூட்டிங் வரும் மே 18ம் தேதியோடு முடிவடையும் என்று கூறப்படுகிறது. | suriya 42 story

இதற்கிடையில், மே மாதத்தில் கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று மிகப் பிரம்மாண்டமாக வெளியாகும் எனவும் அது புரோமோசனுக்காக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா பல கேரக்டர்களில் வருகிறாராம். அதுமட்டுமின்றி இந்த படத்தை 10க்கும் அதிகமான மொழிகளில் வெளியிடுகிறார்களாம். | suriya 42 release date

கங்குவா படத்தின் ஹிந்தி ரைட்ஸ், டிஜிட்டல் உரிமை போன்றவை கிட்டத்தட்ட 300 கோடியைத் தொட்டுள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 500 கோடி வசூலை அள்ளும் என்று தகவல் பரவி வருகிறது. | suriya 42 digital rights

சூர்யா ஜோடியாக படத்தில் திஷா பதானி நடித்து வருகிறார். சீதா ராமம் பட புகழ் மிர்ணாள் தாகூரும் படத்தில் இருக்கிறார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த படத்தை கே இ ஞானவேல் ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்து வருகிறார். படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. | suriya 42 heroine name

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!