சூர்யா 42 படத்தில் இன்னொரு நாயகி?

சூர்யா 42 படத்தில் இன்னொரு நாயகி?
X

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படக்குழுவினர்

திஷா பதானிக்கு இந்த படத்தில் மிக அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும், அவருக்கு இரண்டு சண்டைக் காட்சிகளும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இதுவரை இந்திய சினிமாவிலேயே பார்க்காத வகையிலான சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42வது படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. சூர்யா 42 என்றே அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சூர்யா ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தில் இன்னொரு நாயகியும் நடிக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப் பூர்வ தகவல் எதுவும் வராத நிலையிலும், நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து இந்த தகவல் கிடைத்துள்ளது.

நிகழ்காலம் கடந்து வரலாற்றுப் பின்னணியில் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் மொத்தம் 10 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக திட்டமிடப்பட்டிருக்கிறது. இதுவரையில் சூர்யா நடித்த மிகப் பெரிய பட்ஜெட் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யாவின் நிகழ்கால போர்சனில் திஷா பதானியும், வரலாற்றுப் பகுதியில் வரும் போர்சனில் சீதா ராமம் படத்தில் வந்த நடிகை மிருணாள் தாக்கூரும் நடிக்கிறார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது.

திஷா பதானிக்கு இந்த படத்தில் மிக அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும், அவருக்கு இரண்டு சண்டைக் காட்சிகளும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் இதுவரை இந்திய சினிமாவிலேயே பார்க்காத வகையிலான சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளனவாம்

திஷா பதானி ஜாக்கிச்சான் போல சுழன்று சுழன்று சண்டைப் பயிற்சி மேற்கொண்டது ரசிகர்களை படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா 42 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது. பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை எண்ணூர் துறைமுகத்தில் நடந்தது. இப்போது பிஜி தீவுகளில் பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளனவாம். இந்நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புகளுக்காக சென்னைக்கு வருகிறது படக்குழு.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி