அழகை மேம்படுத்திக் கொள்ள அறுவை சிகிச்சை…நடிகை ஸ்ரீதேவி தொடங்கி வைத்த மோகம்..!

அழகை மேம்படுத்திக் கொள்ள அறுவை சிகிச்சை…நடிகை ஸ்ரீதேவி தொடங்கி வைத்த மோகம்..!
X
திரைப்பட நடிகைகள் தங்களது அழகை மேம்படுத்திக்கொள்ள அறுவை சிகிச்சைகள்கூட செய்துகொள்கிறார்கள்.

திரைப்பட உலகில் நடிகை, நடிகையர் தாங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் அதிகம் அக்கறை கொள்வார்கள். அதிலும், குறிப்பாக நடிகைகள் சற்று கூடுதலாகவே மெனக்கெடுவார்கள். தங்கள் அழகைப் பராமரித்துக்கொள்ள தனிப்பட்ட கவனம் செலுத்துவார்கள். உடற்பயிற்சி, டயட் போன்றவற்றையும் தாண்டி அறுவை சிகிச்சையைக்கூட செய்துகொள்வார்கள். குறிப்பாக நடிப்பது, நடனமாடுவது மட்டுமின்றி தங்களின் லுக்கை மேம்படுத்திக் கொள்வதில் நட்சத்திர நடிகைகளின் ஆர்வம் அளவு கடந்தது. ஏனெனில், அதுவே தங்களுக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகளை அதிகரிக்கவும் ரசிகர்களைக் கவரவும் காரணமாக இருக்கும் என்பதுதான்.

அந்தவகையில், நடிகைகள் தங்களின் அழகை மேம்படுத்திக்கொள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவது பரவலாக உள்ளது. அறுவை சிகிச்சை மூலமாக தங்களின் முகங்களில் உள்ள பாகங்களைத் தங்களுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொள்வார்கள். தமிழ்த் திரையுலகில் இந்த அழகு மேம்பாட்டு அறுவை சிகிச்சைக்கு நடிகை ஸ்ரீதேவிதான் முதலில் முன்னெடுப்பு செய்தார் எனலாம்.

ஆம். தென்னிந்தியத் திரையுலகின் மூலம் இந்திய அளவில் தனது புகழை நீட்டித்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டில் பாதம் பதித்தார். அங்கேயும் தனது நடிப்பாலும் அழகாலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். அதன்பிறகு, மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த ஸ்ரீதேவி 1990-களில் அழகை மேம்படுத்திக்கொள்ள அவர் தனது நாசியை அறுவை சிகிச்சை மூலம் மாற்றி அமைத்துக் கொண்டார். பின்னர் ஃபேஸ்லிஃப்ட், போடோக்ஸ் போன்ற ஒப்பனை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் உதட்டை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார் என்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் எவர்கிரீன் ஹீரோயின்ஸ் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா ஆகியோரும் தங்களது அழகை அறுவை சிகிச்சை மூலம் மேம்படுத்திக் கொண்டவர்களே. நடிகை நயன்தாரா, 2005-ல் வெளியான, 'ஐயா' திரைப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் அறிமுகப் படத்திற்கும் தற்போதைய நிலைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே, அவரது முகத்தின் மாற்றம் நன்றாகத் தெரிந்துவிடும். நயன்தாரா தனது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

அவரைப் போலவே, நடிகை திரிஷாவும் தனது அழகை மேம்படுத்திக்கொள்ள அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா, மிஸ் சென்னை 1999 பட்டத்தை வென்றவர். அவர், 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். திரையில் அறிமுகமானபிறகு, ஒரு சில ஆண்டுகள் கடந்த நிலையில், நடிகை திரிஷா rhinoplasty என்ற அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், அதன்மூலம் அவரின் நாசிப் பகுதியை மாற்றிக்கொண்டதாகவும் தெரிய வருகிறது.

தற்போது, தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாகவும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தொடக்க காலங்களில் அவர் நடித்த படங்களைவிட தற்போது, நடிகை சமந்தா இன்னும் அழகாக மாறியிருப்பதற்கு காரணம், அவர் செய்துகொண்ட அறுவை சிகிச்சைதான் என்கிறார்கள். நடிகை சமந்தா 2012-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் 'Yeto Vellipoyindi Manasu' என்ற தெலுங்குப் படத்தில் இருந்து அவரது முகத்தில் மாற்றம் தெரிந்தது என்கிறார்கள் நடிகை சமந்தாவைக் கூர்ந்து கவனித்து வரும் அவரது ரசிகர்கள்.

அதேபோல், தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையும் நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசனும் அழகை மேம்படுத்தும் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவிக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், திரையுலகிற்கு அறிமுகமாகும் முன்பே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்கிறார்கள். மேலும், அதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு ஒப்புக்கொள்ளவும் செய்தார்.

அடுத்து, தமிழ்த் திரையுலகின் சென்சேஷன் நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை தமன்னா, தனது தொடக்ககாலப் படங்களின் மூலமே தமன்னாவிற்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. மேலும், தொடக்க காலப் படங்களுக்கும் அவரின் தற்போதையே படங்களுக்கும் நிறைய வித்தியாசம் தெரியும். அதன்படி அவர் முகத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும், ஆனால் இது குறித்து அவர் வெளியே சொல்ல மறுப்பதாகவும் தகவல் உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர், 'மகதீரா' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரும் தனது அழகை மேம்படுத்திக் கொள்ள முகத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிய வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!