ஷங்கர் மகளுக்காக பிரபல பாடகியை தூக்கிய யுவன்?

அதிதி சங்கர்.
Viruman Movie --இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி, முதல் படம் ரிலீசாகும் முன்பே அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருவது சர்ச்சையை கிளப்பியது.
இந்தி சினிமாவைப் போல் தமிழ் சினிமாவில் நெப்போடிசம் எனப்படும் வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் விஷயம் தலைதூக்குகிறதா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. நடிகை ஆத்மிகா கூட சமீபத்தில் அதிதி ஷங்கருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைப்பதை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இது ஒருபுறம் இருக்க தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார் அதிதி.
விருமன் படத்தின் மூலம் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார் அதிதி. அவர் இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் என்கிற பாடலை யுவனுடன் சேர்ந்து பாடி உள்ளார். இப்பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இப்பாடலுக்கு பின்னணியில் நடந்த விஷயம் தற்போது லீக் ஆகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
மதுர வீரன் பாடலை முதலில் பாடியது சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி தானாம். புஷ்பா படத்தில் அவர் பாடிய சாமி சாமி பாடல் ஹிட் ஆனதை அடுத்து மதுர வீரன் பாடலுக்கு அவரது குரல் எடுப்பாக இருக்கும் என கருதி பாட வைத்தாராம் யுவன். ஆனால் இறுதியில் பாடல் வெளியானபோது தனது குரலை நீக்கிவிட்டு ஷங்கர் மகள் அதிதியை பாட வைத்துள்ளதை அறிந்து ராஜலட்சுமி மிகவும் வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu