Sundari சித்துவுடன் திருமணம்! ட்விஸ்ட் வைத்த சுந்தரி!

Sundari சித்துவுடன் திருமணம்! ட்விஸ்ட் வைத்த சுந்தரி!
X
சுந்தரியிடம் என் வீட்டுக்கு மருமகளா வந்தீன்னா என்று தயங்கி தயங்கி கேட்கிறார் சித்துவின் அப்பா மணி. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுந்தரி அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் முழிக்கிறாள்.

சுந்தரியிடம் என் வீட்டுக்கு மருமகளா வந்தீன்னா என்று தயங்கி தயங்கி கேட்கிறார் சித்துவின் அப்பா மணி. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுந்தரி அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் முழிக்கிறாள்.

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 8th May 2023

மணியும் சித்துவும் சுந்தரியை வீட்டுக்கு அழைத்திருக்கிறார்கள். சித்துவின் அப்பா மணியைக் காண வீட்டுக்கு வந்த சுந்தரி அவரின் உடல் நலம் குறித்து விசாரிக்கிறார். சுந்தரியுடன் வந்த கிருஷ்ணா நடந்த விசயங்கள் அனைத்தும் தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு ஆமா எல்லா விசயங்களும் தெரியும் என்று கூறுகிறார் மணி.

கிருஷ்ணாவும் சுந்தரியும் விசயம் புரியாமல் எதற்கு வரச் சொன்னீர்கள் என்று எப்படி கேட்பது என்பதை அறியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார்கள். மணி சித்துவுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசித்து வருவதாகவும் இவன் அம்மாவும் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்னையும் சித்துவையும் பார்த்துக்கொள்ள வேற யாரு இருக்கா என்று கேட்டார் மணி.

யாரும் இல்லையா என்று கேட்டு சுந்தரி தான் இருப்பதாக கூறுகிறாள். அனுவைப் பார்த்துக் கொண்டதும், அனுவின் அம்மா மல்லிகாவைப் பார்த்து வீட்டுக்கு கொண்டு வந்ததும் மணி மெச்சி கூறுகிறார். இதனிடையே தனது மனதில் இருக்கும் ஆசையையும் மனம் திறந்து பேசுகிறார். சுந்தரியை தன் வீட்டுக்கு மருமகளாக வரச் சொல்லி கேட்கிறார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைகிறார் சுந்தரி.

ஆனால் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சித்து உடனே கூறிவிடுகிறார். சித்து தான் வேண்டாம் என எத்தனையோ முறை கூறியும் அப்பா மணிதான் இதைக் கேட்கிறார். நான் இதனை பேசவேண்டாம் என்றுதான் கூறினேன் என்கிறார். இதில் என்ன தவறு, இதனை யோசிக்குமாறு கிருஷ்ணா கூற, கோபப்பட்டு கிருஷ்ணாவைத் திட்டிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 6th May 2023

சுந்தரிக்கு குழந்தை பாக்கியம் இருப்பது தெரிய வந்ததும் கார்த்தியின் மீது அனைவரும் கோபத்தில் இருக்கிறார்கள். கிருஷ்ணா, சுந்தரி, சித்து, அனுவின் அம்மா மல்லிகா என அனைவரும் கார்த்தியின் மீது கடுமையான கோபத்தில் இருந்தாலும் அவனை எதுவும் செய்ய முடியாத நிலைமையில் இருக்கிறார்கள்.

சுந்தரிக்கு இந்த விசயம் தெரியவந்ததும் அவனை தனது செருப்பைக் கொண்டு அடித்து அவமானப்படுத்தினாள். இதனால் அவளைப் பழி வாங்கத் திட்டமிட்டிருக்கும் கார்த்திக், சுந்தரியின் விரோதி அருணுடன் சேர்ந்து அவளைப் பழிவாங்கத் துடிக்கிறான்.

சுந்தரியின் அப்பத்தாவிடம் பொய் சொல்லி சத்து மாத்திரை என தூக்க மாத்திரையைக் கொடுத்து சுந்தரிக்கு கொடுக்கிறான். அப்பத்தாவும் வெகுளித்தனத்தால் இதனை சுந்தரிக்கு பாலில் கலந்து கொடுத்துவிடுகிறார். அதனையடுத்து இரவு அசந்து தூங்கிவிடுகிறாள் சுந்தரி. காலையில் எழுந்ததும் அதிர்ச்சி. ஒரே படுக்கையில் கார்த்திக்குடன் சுந்தரி படுத்து இருந்ததை பார்த்து பதறியடித்து எழுகிறாள் சுந்தரி.

தன்னை ஏதோ செய்துவிட்டதாக முதலில் சுந்தரி நம்பினாலும் அடுத்தடுத்து கார்த்திக் பேச பேச நடந்ததை புரிந்து கொள்கிறாள். தனக்கு ஏதோ நடந்ததை உணர்ந்த அவள், அப்பத்தாவிடம் சென்று கேட்க அனைத்தையும் சொல்கிறாள் அப்பத்தா. இதன் பின்னர் கார்த்தியிடம் வந்து சண்டை போட ஆரம்பிக்கிறாள். ஆனால் கார்த்தி தான் பழிவாங்குவதைக் கூறுகிறான்.

இதனை அடுத்து அவள் மல்லிகாவிடம் சென்று நடந்ததைக் கூறி ஆறுதல் தேடுகிறாள். மல்லிகாவும் அவளுக்கு ஆறுதல் கூற, அந்த நேரம் பார்த்து அனுவின் உயிர்த் தோழன் சிவா அங்கு வருகிறார். அவருக்கு அனைத்து விசயங்களும் தெரியும் என்பதை மல்லிகா சொல்கிறார். சுந்தரி கார்த்திக்கை செருப்பால் அடித்ததை பார்த்துவிட்டு தன்னிடம் சிவா வந்து கேட்கும்போது அனைத்தையும் கூறிவிட்டேன் என்று கூறுகிறார்.

சிவா, சுந்தரியைப் பற்றி பெருமிதமாக கூறினாலும் பின் அனுவின் வாழ்க்கையைக் கெடுத்து கார்த்திக்கை தான் சும்மா விடப்போவதில்லை. அனு எனக்கு சகோதரி போன்றவர் என திட்டம் தீட்டுகிறார் டாக்டர் சிவா.

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 9th May 2023

கார்த்தி, அனுவுக்கும் சுந்தரிக்கும் துரோகம் செய்ததை அறிந்த அனுவின் உயிர் தோழன் சிவா, கார்த்தியை தண்டிக்கப்போவதாக கூறுகிறார். இதனால் அடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!