Sundari சுந்தரியைக் கொல்ல வரும் அருண்! அனுவுடன் மல்லுக்கட்டும் கார்த்தியின் அக்கா!
சுந்தரி சீரியல்5 ஜூலை 2023 | Sundari 5th July 2023 Episode
விரைவில் அப்டேட் செய்யப்படும்
சுந்தரி சீரியல் 4 ஜூலை 2023 | Sundari 4th July 2023 Episode
சுந்தரியையும் அப்பத்தாவையும் ஜானகி கோவிலுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அருணும் அவனது கூட்டாளியும் சுந்தரியைக் கொல்லும் எண்ணத்தோடு நிற்கிறார்கள். அவர்கள் கோவிலுக்குள் செல்வதைப் பார்த்த அருண் அவர்களை பின் தொடர்ந்து செல்கிறான். அருணின் நண்பனும் அவன் பின்னாடியே செல்கிறான். அங்கு கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் சுந்தரியை கொலை செய்ய முயல, நண்பன் தடுக்கிறான். இது கோவில் இங்க வச்சா கொல்லப்போற என்று அவன் கேட்க, அதற்கு நான் கொண்ட லட்சியத்தை அடையணும்னா இதெல்லாம் பண்ணிதான் ஆகணும் என்பது போல அவன் பார்க்கிறான்.
சுந்தரியும் அப்பத்தாவும் கோவிலுக்கு சென்றுவிட்டதை அறியாத அனு சுந்தரி வீட்டுக்கு வருகிறாள். அவளுடன் கார்த்திக் வந்தாலும் உள்ளே செல்ல தயங்கி நிற்கிறான். அந்த சமயத்தில் உள்ளே சுந்தரி இல்லை ஆனால் கார்த்திக்கின் அக்கா லட்சுமி அவர்களிடம் சண்டைக்கு போகிறாள். முக்கியமாக கார்த்தியை சட்டையைப் பிடித்து சண்டை போடுகிறாள்.
சுந்தரி சீரியல் 3 ஜூலை 2023 | Sundari 3rd July 2023 Episode
மாலினியின் குழந்தை கலைந்துவிட்டது என்பதை கிருஷ்ணா சொல்லவே, லட்சுமி தலையில் அடித்துக் கொண்டு அழுகிறாள். இதுவே சுந்தரிக்கு நடந்திருந்தால் நீங்க எப்படி ரியாக்ட் பண்ணிருப்பீங்க,.. உங்க பிள்ளைனதும் இப்படி அழுறீங்க, புலம்புறீங்க என கிருஷ்ணா கேட்கும் கேள்விகளுக்கு எதுவும் சொல்லமுடியாமல் அழ ஆரம்பிக்கிறாள் மாலினியின் அம்மா லட்சுமி.
சுந்தரியின் ஹவுஸ் ஓனர் அக்கா ஜானகியுொடன் அப்பத்தா பேசிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்குள் சுந்தரிக்கு எங்கே போஸ்டிங் கிடைக்கும் என்பது குறித்த பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. சுந்தரிக்கு எங்க ஊர்லயே போஸ்டிங் கிடைக்கணும் என்கிறாள் அப்பத்தா. ஹவுஸ் ஓனர் அக்காவோ அதெல்லாம் இங்க நடைமுறை இல்ல உங்க பேத்திக்கு தண்ணி இல்லாத காட்ல கூட போஸ்டிங் போடுவாங்க. இத எப்படி சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் அப்பத்தாவுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் பாஷை தெரியாத ஊருக்கு அனுப்பிடுவாங்களோ என அப்பத்தா பயப்படுகிறாள். இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டே, தன் சொந்த ஊருக்கே கலக்ட்ராக வரவேண்டும் என்ன செய்யலாம் என அப்பத்தா கேட்கிறார். அப்போது இடையில் மல்லிகா ஹவுஸ் ஓனர் அக்கா ஜானகிக்கு அழைக்கிறார். அவர்கள் ஏதோ பிரச்னை குறித்து பேசிக் கொள்கிறார்கள். அங்கு யார்யாரெல்லாம் இருக்கிறார் என்று கேட்கிறார் மல்லிகா.
பெரியம்மா, நானு, சுந்தரி, கிருஷ்ணா, மாலினி, லட்சுமி எல்லாரும் இங்க இருக்காங்க என்கிறாள் ஜானகி. அங்கு அனு வரப்போகிறார், வந்தால் பிரச்னை ஆகும் என மல்லிகா சொல்கிறார். இதனால் ஜானகி திட்டமிட்டு அப்பத்தாவையும், சுந்தரியையும் கோவிலுக்கு கூட்டிச் செல்ல முயற்சிக்கிறாள். அப்பத்தாவிடம் சுந்தரிக்கு உள்ளூரில் போஸ்டிங் கிடைக்க வழிபட செல்வோம் என்று கூறி கோவிலுக்கு கூட்டிச் செல்கிறாள் ஜானகி. உடன் சுந்தரியையும் அழைத்துச் செல்ல திட்டமிடுகிறாள்.
அருணும், அவன் கூட்டாளியும் சுந்தரியைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். அருண் தான் ஊரில் பதுங்கி இருப்பதாக காட்டிக் கொண்டு சென்னைக்கு வந்துவிடுகிறான். அவன் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கையெழுத்து போட வரவில்லை என போலீஸ் கார்த்தியைக் கூப்பிட்டு மிரட்டுகிறது. தன்னை வந்து பார்க்கச் சொல்லும் காவலரை, அலட்சியப்படுத்துகிறான் கார்த்திக். ஆனால் போலீஸ் கடுப்பாகி உடனே ஸ்டேசனுக்கு வரச் சொல்லுகிறது. போலீசிடம்தான் கார்த்தி பேசிக்கொண்டிருக்கிறான் என்று தெரியாத அனு, அந்த ஃபோனைப் பிடுங்கி, அவர்தான் அவ்ளோ சொல்றார்ல வருவாரு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க என்று கூறி போனைக் கட் செய்துவிடுகிறாள்.
போலீஸ் இவரது மொபைல் எண்ணை வைத்து டிரேஸ் செய்து இவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து கூட்டிச் செல்ல வருகிறது. இந்த விசயத்தால் கார்த்தி டென்சனாக இருக்கிறான்.
அருணும் சுந்தரியைக் கொல்ல நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த இடத்துக்கு அருகே இருக்கும் கோவிலுக்கு ஜானகி, அப்பத்தா, சுந்தரி ஆகியோர் வருகிறார்கள். சுந்தரி வீட்டுக்கு வருகிறார்கள் அனுவும் கார்த்தியும், கார்த்தியைத் தேடி வருகிறது காவல்துறை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu