வலுத்த சந்தேகம்... கார்த்திக்கு கொக்கி போடும் முருகன்!
சுந்தரி இப்போது | sundari Today Episode 4 March 2023
கோபத்தில் கொந்தளித்த கார்த்திக்கின் அம்மா உடல் நலம் சரியில்லாமல் மயக்கம் வரவே, அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள் அங்கு உறவினர்கள் கூடி இருக்கையில், பதறியடித்துக் கொண்டு வருகிறாள் சுந்தரி
அத்தையிடம் இப்ப பரவாயில்லையா அத்த என்று கேட்க, மாமியாரோ அவன் போயிட்டானா என எரிந்து விழுகிறாள். இனிமே அவன் இங்கு வரக்கூடாது என்று சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். முருகன் மாமாவுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரிய மாட்டேங்குது. சுந்தரி குற்ற உணர்ச்சியிலும் என்ன இந்த அத்த இப்படி சொல்றாங்க என வருத்தத்திலும் இருக்கிறாள்.
அத்த கோபத்தில் கத்தியதும் முருகனுக்கு சந்தேகம் வலுக்கவே, அதை அப்படியே நம்ம மாப்ளைகிட்ட கேட்டுறலாம்னு பைக் எடுத்துக்கிட்டு வராரு முருகன். அங்கு கார்த்திக்கும், அவனது உதவியாளரும் தனியே நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அங்கு வந்த முருகன், அத்தை இவ்ளோ கோபமா இருக்குற அளவுக்கு நீங்க என்ன மாப்ள பண்ணீங்க என்று கேட்கிறார். அதற்கு மாமா என்று இழுத்து தயங்கி மென்று முழுங்கி கொண்டிருக்கிறான் கார்த்திக். அதனைப் பார்த்த முருகன், மாப்ள தயங்காம என்ன நடந்தாலும் உடச்சி சொல்லுங்க என்று கேட்கிறார்.
சுந்தரி இதுவரை | sundari Today Episode 3 March 2023
அனுவிடம் பொய் சொல்லிக் கொண்டு கார்த்திக் ராமேஸ்வரம் போய்க்கொண்டிருப்பது தெரிந்துவிட்ட நிலையில், அனு குழப்பத்தில் இருக்கிறாள். நான் வருகிறேன் என்று சொல்லியும் கேட்காத அவன் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறான் என நினைக்கிறாள். அடுத்து சுந்தரியின் வீட்டில் உயில் அவள் பெயரில் எழுதப்பட்டிருப்பது தெரிந்து வருந்துகிறாள் சுந்தரி.
தன்னுடைய மருமகளுடன் சேர்ந்து வாழும்பட்சத்திலேயே சொத்து முழுவதையும் கார்த்திக் அனுபவிக்க முடியும் என்று உயில் எழுதப்பட்டிருப்பதால், கார்த்தி என்ன சொல்லப்போகிறானோ என வருத்தப்படுகிறாள் சுந்தரி.
சுந்தரியும் மற்றவர்களும் இறுதி சடங்கு செய்யும் இடத்துக்கு வந்து சேர்கின்றனர். அங்கே கார்த்திக்கும் வந்து சேரவே, அவனை வைத்து இறுதி சடங்குகள் நடந்தேறுகின்றன. கொள்ளிதான் வைக்க முடியவில்லை அட்லீஸ்ட் இதுவாச்சும் செய்கிறானே என அனைவரும் இருக்க, அந்த நேரத்தில் கார்த்திக்கின் அம்மா அங்கு கோபத்துடன் வந்து அவனை அடித்து நொறுக்குகிறாள்.
அம்மா அடிப்பதை தடுக்கவும் முடியாமல் உண்மையைக் கூறவும் முடியாமல் தவிக்கிறான் கார்த்தி. அத்தை விடுங்க என்று அவரைத் தடுக்க பார்க்கிறாள் சுந்தரி. ஆனால் என்ன செய்வது, ஒரு சின்ன குழந்தையைக் காப்பாற்ற போயி, பெரிய உசுரு போயிடிச்சு இனி அமைதியா இருக்ககூடாது உண்மையைச் சொல்லிடவேண்டியதுதான் என்கிறாள் சுந்தரி.
சுந்திரியின் அம்மாவுக்கு கொஞ்சம் கார்த்திக் மீது சந்தேகம் வருகிறது. முருகனும் கார்த்தி மீது என்ன தவறு இருக்கும் என்ற கோணத்தில் யோசிக்க துவங்குகிறார். இதனால் அடுத்த நாள் சுந்தரி எபிசோட் வேற லெவலுக்கு போகப்போகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu