வலுக்கும் சந்தேகம்! உண்மையைக் கூற தயாரான சுந்தரி!

வலுக்கும் சந்தேகம்! உண்மையைக் கூற தயாரான சுந்தரி!
X
சுந்தரியின் அம்மா, முருகன் மாமா ஆகியோருக்கு வலுக்கும் சந்தேகம் கார்த்தி மீது திரும்புகிறது. உண்மையைக் கூற தயாராகிறாள் சுந்தரி!

சுந்தரி இப்போது

அனுவிடம் பொய் சொல்லிக் கொண்டு கார்த்திக் ராமேஸ்வரம் போய்க்கொண்டிருப்பது தெரிந்துவிட்ட நிலையில், அனு குழப்பத்தில் இருக்கிறாள். நான் வருகிறேன் என்று சொல்லியும் கேட்காத அவன் என்னிடம் பொய் சொல்லியிருக்கிறான் என நினைக்கிறாள். அடுத்து சுந்தரியின் வீட்டில் உயில் அவள் பெயரில் எழுதப்பட்டிருப்பது தெரிந்து வருந்துகிறாள் சுந்தரி.

தன்னுடைய மருமகளுடன் சேர்ந்து வாழும்பட்சத்திலேயே சொத்து முழுவதையும் கார்த்திக் அனுபவிக்க முடியும் என்று உயில் எழுதப்பட்டிருப்பதால், கார்த்தி என்ன சொல்லப்போகிறானோ என வருத்தப்படுகிறாள் சுந்தரி.

சுந்தரியும் மற்றவர்களும் இறுதி சடங்கு செய்யும் இடத்துக்கு வந்து சேர்கின்றனர். அங்கே கார்த்திக்கும் வந்து சேரவே, அவனை வைத்து இறுதி சடங்குகள் நடந்தேறுகின்றன. கொள்ளிதான் வைக்க முடியவில்லை அட்லீஸ்ட் இதுவாச்சும் செய்கிறானே என அனைவரும் இருக்க, அந்த நேரத்தில் கார்த்திக்கின் அம்மா அங்கு கோபத்துடன் வந்து அவனை அடித்து நொறுக்குகிறாள்.

அம்மா அடிப்பதை தடுக்கவும் முடியாமல் உண்மையைக் கூறவும் முடியாமல் தவிக்கிறான் கார்த்தி. அத்தை விடுங்க என்று அவரைத் தடுக்க பார்க்கிறாள் சுந்தரி. ஆனால் என்ன செய்வது, ஒரு சின்ன குழந்தையைக் காப்பாற்ற போயி, பெரிய உசுரு போயிடிச்சு இனி அமைதியா இருக்ககூடாது உண்மையைச் சொல்லிடவேண்டியதுதான் என்கிறாள் சுந்தரி.

சுந்திரியின் அம்மாவுக்கு கொஞ்சம் கார்த்திக் மீது சந்தேகம் வருகிறது. முருகனும் கார்த்தி மீது என்ன தவறு இருக்கும் என்ற கோணத்தில் யோசிக்க துவங்குகிறார். இதனால் அடுத்த நாள் சுந்தரி எபிசோட் வேற லெவலுக்கு போகப்போகிறது.

சுந்தரி இதுவரை

இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் வீட்டில் வந்து நிற்கிறாள் சுந்தரி. அங்கு சுந்தரியின் மாமியார், நாத்தனார் இருக்கிறார்கள். வழக்கறிஞர் ஒருவரும் வந்திருக்கிறார். என்ன விசயம் என புரியாமல் முழிக்கும் சுந்தரி தன் மாமியாரிடம் என்ன என்று கேட்க அவளோ தன்னிடம் இருக்கும் நோட்டீஸ் ஒன்றை சுந்தரி கையில் கொடுக்கிறாள்.

சுந்தரி அதை வாங்கி படித்து பார்க்கிறாள். இதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே சுந்தரியின் கண்களில் மிரட்சி தெரிகிறது. அவள் எதிர்பாராத ஒன்று நடந்திருப்பதை அறியமுடிகிறது. ஆனால் இதை கார்த்திக் அறிந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதை அவள் கற்பனை செய்து பார்க்க நினைக்கவில்லை. ஆனால் கார்த்திக்கு தெரிந்தால் மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்கிறது.

மறுபுறம் கார்த்திக் ராமேஸ்வரம் சென்று வரப் போவதாக அனுவிடம் கூறியிருக்கிறான். காலையிலேயே ராமேஸ்வரத்துக்கு போவதாக கூறிவிட்டு கார் எடுத்துக் கொண்டு செல்கிறான். இதனை அனு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் டோல்கேட்டில் இருந்து வரும் மெசேஜால் அவன் மாட்டிக் கொள்கிறான். அவன் ராமேஸ்வரம் போகவில்லை.

கார்த்திக் ராமேஸ்வரம் போகிறேன் என்று கூறிக்கொண்டு மேலூர் டோல்கேட் கிராஸ் பண்ண மெசேஜ் மூலம் மாட்டிக் கொண்டான். அநேகமாக அவன் அவனது அப்பா வீட்டுக்குத் தான் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டிருப்பாள் அனு.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!