கார்த்திக் அப்பாவின் உயில்... ஷாக்கில் கார்த்தி!

கார்த்திக் அப்பாவின் உயில்... ஷாக்கில் கார்த்தி!
X
கார்த்திக் ராமேஸ்வரம் போகிறேன் என்று கூறிக்கொண்டு மேலூர் டோல்கேட் கிராஸ் பண்ண மெசேஜ் மூலம் மாட்டிக் கொண்டான். அநேகமாக அவன் அவனது அப்பா வீட்டுக்குத் தான் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டிருப்பாள் அனு.

சுந்தரி இப்போது | sundari Today Episode 2nd March 2023

இறுதி சடங்குகள் முடிந்த நிலையில் வீட்டில் வந்து நிற்கிறாள் சுந்தரி. அங்கு சுந்தரியின் மாமியார், நாத்தனார் இருக்கிறார்கள். வழக்கறிஞர் ஒருவரும் வந்திருக்கிறார். என்ன விசயம் என புரியாமல் முழிக்கும் சுந்தரி தன் மாமியாரிடம் என்ன என்று கேட்க அவளோ தன்னிடம் இருக்கும் நோட்டீஸ் ஒன்றை சுந்தரி கையில் கொடுக்கிறாள்.

சுந்தரி அதை வாங்கி படித்து பார்க்கிறாள். இதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே சுந்தரியின் கண்களில் மிரட்சி தெரிகிறது. அவள் எதிர்பாராத ஒன்று நடந்திருப்பதை அறியமுடிகிறது. ஆனால் இதை கார்த்திக் அறிந்துகொண்டால் என்ன நடக்கும் என்பதை அவள் கற்பனை செய்து பார்க்க நினைக்கவில்லை. ஆனால் கார்த்திக்கு தெரிந்தால் மைண்ட் வாய்ஸ் வெளியில் கேட்கிறது.

மறுபுறம் கார்த்திக் ராமேஸ்வரம் சென்று வரப் போவதாக அனுவிடம் கூறியிருக்கிறான். காலையிலேயே ராமேஸ்வரத்துக்கு போவதாக கூறிவிட்டு கார் எடுத்துக் கொண்டு செல்கிறான். இதனை அனு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் டோல்கேட்டில் இருந்து வரும் மெசேஜால் அவன் மாட்டிக் கொள்கிறான். அவன் ராமேஸ்வரம் போகவில்லை.

கார்த்திக் ராமேஸ்வரம் போகிறேன் என்று கூறிக்கொண்டு மேலூர் டோல்கேட் கிராஸ் பண்ண மெசேஜ் மூலம் மாட்டிக் கொண்டான். அநேகமாக அவன் அவனது அப்பா வீட்டுக்குத் தான் போய்க்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்து கொண்டிருப்பாள் அனு.

சுந்தரி இதுவரை | sundari Today Episode 2nd March 2023

உண்மை தெரிந்து உடல் நிலை மோசமாகி மரணமடைந்த கார்த்திக்கின் அப்பா இறுதி சடங்கை கார்த்திக் செய்யக்கூடாது என அவரது அம்மா கோபமாக கூறிவிட, கார்த்திக் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து சென்று விடுகிறான்.

மாமனார் உடலைப் பிடித்து சுந்தரி அழுது புரண்டு உருள்கிறாள். அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டதே என குற்ற உணர்ச்சியில் இருக்கிறாள் சுந்தரி. எல்லாவற்றுக்கும் காரணம் கார்த்தியும் அதற்கு ஏதோ ஒரு வகையில் தானும் காரணம் என்பது சுந்தரியின் குற்ற உணர்ச்சிக்கு காரணம்.

மாமனாருக்கு இறுதி சடங்கு ஆனால் அன்றைய தினம்தான் சுந்தரிக்கு தேர்வு. அழுதுகொண்டே தேர்வெழுதவும் முடியாமல் மாமனார் இறந்த துக்கமும் தாங்காமல் சுந்தரி இருக்கிறாள். அவள் தான் இறுதிசடங்கு செய்யவேண்டும் சுந்தரியின் மாமியார் கண்டிப்பாக கூறிவிடவே, அவள் தேர்வெழுதிவிட்டு மாலைக்குள் வந்துவிடுவார் என முருகன் கூறுகிறார். அதுவரை ஏதேதோ பேசிக்கொண்டிருந்த ஊர் மக்கள் முருகனின் பேச்சைக் கேட்டு அமைதியாகிறார்கள்.

தேர்வெழுதிவிட்டு வீடு வரும் சுந்தரி மாமனார் உடலைப் பார்த்து கதறி அழுகிறாள். பின் இறுதி சடங்கை செய்கிறாள். இதனை வீடியோ காலில் கிருஷ்ணா கார்த்திக்கு காட்டுகிறான். அதை கார்த்தி பார்த்து துக்கம் தொண்டையை அடைத்து விம்மி விம்மி அழுகிறான்.

அங்கு வந்த அனு கார்த்திக் அழுவதை கவனிக்கிறாள். தன் தந்தையின் இறுதிச் சடங்கு முடிந்துவிட்டதாக கூற, யார் கொள்ளி வைத்தார் என அனு கேட்கிறாள். அதற்கு பதில் சொல்ல முடியாதவனாய் முழிக்கிறான் கார்த்திக். ஆனாலும் அவன் அழுதுகொண்டு இருக்கையில் அவனை ஆறுதல் படுத்துகிறாள் அனு.

Tags

Next Story
why is ai important to the future