Sundari குத்திக் காண்பிக்கும் மீனா! டென்சன் ஆகும் கார்த்தி! அனு வீட்டில் அமர்க்களம்!

Sundari குத்திக் காண்பிக்கும் மீனா! டென்சன் ஆகும் கார்த்தி! அனு வீட்டில் அமர்க்களம்!
X
சித்துவின் மாமா மகள் மீனா கடைசி நேரத்தில் டிவிஸ்ட் கொடுக்க கார்த்திக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைகிறது. இதனால் சுந்தரி தனது அதிரடியைக் காட்டுகிறாள்

சித்துவின் மாமா மகள் மீனா கடைசி நேரத்தில் டிவிஸ்ட் கொடுக்க கார்த்திக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைகிறது. இதனால் சுந்தரி தனது அதிரடியைக் காட்டுகிறாள்

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 26th May 2023

சுந்தரியுடன் சித்து கொண்டுள்ள உண்மையான நட்பை புரிந்துகொண்ட மீனா, வெளியில் சென்று சுந்தரியை அனைவரது முன்னும் பெருமையாக பேசி, இவர் தாலி எடுத்து கொடுத்தாதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்கிறார். இதனால் சுந்தரி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். கார்த்தியின் மூக்கு உடைபட்டு எதுவும் செய்யாமல் இருக்கிறான்.

சித்து - மீனா திருமணமும் நடக்கிறது. மகிழ்ச்சியாக சித்துவை மணக்கிறாள் மீனா. அப்போது சுந்தரியும் மகிழ்ச்சியடைகிறாள். வீட்டுக்கு சென்று திருமணம் முடிந்த கையோடு குடும்பமாக உக்காந்து பேசுகிறார்கள். வழக்கமாக சுந்தரியும் மாலினியும் கிருஷ்ணாவை வாருவது போல இப்போதும் வாருகின்றனர். சித்துவும் கிருஷ்ணாவைக் கலாய்க்கிறான். மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கின்றனர். அந்த இடத்தில் மல்லிகாவும் இருக்கிறார். அவர் அனைவரையும் விருந்துக்கு கூப்பிட நினைக்கிறார்.

வேறு யாரும் விருந்துக்கு அழைப்பார்களா என்பதை உறுதி செய்துகொள்ள நினைக்கும் வேளையில் தங்களுக்கு வேறு யாரும் இல்லை என்று கூற, மல்லிகா மீனாவும் சுந்தரி மாதிரியே என் பொண்ணுதான்மா என்று அன்பு மழை பொழிகிறார். அவர்களை வீட்டுக்கு அழைத்துவிட்டு செல்கிறார்.

அனுவிடம் நடந்ததைக் கூறி நாளைக்கு விருந்து ஏற்பாடு செய்யப்போகிறேன் என்று கூறியிருப்பார் போல, அனு கார்த்திக்கிடம் இதனை தயங்கி தயங்கி சொல்கிறார். அந்த விருந்துக்கு டாக்டர் சிவாவையும் வர வைக்க அனுமதி கேட்கிறார். அதனால என்ன உன் இஷ்டம் என்று கார்த்திக் சொல்லிவிடுகிறான்.

அடுத்த நாள் விருந்துக்கு சித்து, மீனா, கிருஷ்ணா , மாலினி, சுந்தரி ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு கார்த்திக்கும் அமர்ந்திருக்கிறான். அனைவருக்கும் நான் வெஜ் வகை பரிமாறப்படுகிறது.

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 24th May 2023

கார்த்திக், அருண், அவன் கூட்டாளி என மூவரும் மண்டபத்துக்கு முன் சந்திக்கிறார்கள். கார்த்தி கையில் ஃபோட்டோக்கள் சிலவற்றை வைத்திருக்கிறார். அதனைப் பார்த்த அருண் இதைப் பார்த்தா கல்யாணம் நின்னுடுமே என்று கூற, கூட்டாளியிடம் இதனை மொய்க் கவரில் வைத்து உள்ளே மக்களிடம் கொடுக்க யோசனை கூறுகிறான். இதனை சொன்னபடியே செய்து முடிக்கிறான் கூட்டாளி. மக்கள் இந்த புகைப்படத்தை எடுத்து பார்க்கிறார்கள். என்ன இது என ஆளாளுக்கு பேசுகிறார்கள். சுந்தரியின் முகம் மாறுகிறது.

மொய்க் கவரில் வைத்து கொடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒவ்வொருவரும் எடுத்து பார்க்கின்றனர். இதனால் திருமண மண்டபத்தில் ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாகிறது. ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டே சடங்குகளைச் செய்து கொண்டிருக்கிறார். பின் மணமகளை அழைத்து வரச் சொல்கிறார். மணக்கோலத்தில் மீனா அமைதியாக வருகிறாள். அவளுக்குள் நிறைய சந்தேகங்கள் இருப்பது வெட்டவெளிச்சமாக இருக்கிறது.

மீனா மணமேடையில் அமர்வார் என எதிர்பார்த்த நிலையில், அவர் நேராக திருமணத்துக்கு வந்திருந்த மக்களிடம் சென்று தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று கூறுகிறாள். நடந்தது என்ன என்று தெரியாமல் பதைபதைக்கின்றனர் அனைவரும். சுந்தரி ஏன் மீனா என்னாச்சு என்று கேட்கிறார். அப்போது எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மீனா கூற, சுந்தரி உனக்கு பிடிச்சு தானே இந்த கல்யாணத்த ஏற்பாடு பண்ணோம்.

இந்த கல்யாணம் நடக்கணும்னா நாங்க என்னதான் பண்ணனும் என்று சுந்தரி கேட்க, அதற்கு நீண்ட நேரமாக அமைதியாக நின்று மீனா, எனக்கு ஒரு சிலர் இந்த கல்யாணத்துல கலந்துக்குறது பிடிக்க, அவங்க இந்த மண்டபத்த விட்டு வெளியில போனா நான் இந்த கல்யாணத்த பண்ணிக்குறேன் என்று கூறுகிறாள்.

அதற்கு மீனா பைத்தியம் மாதிரி பேசாதே என்று சித்து கத்துகிறான். உடனே அவனை சமாதானம் செய்கிறான் கிருஷ்ணா. உனக்கு என்ன வேணும்னு கேளு நாங்க செய்றோம் என்று கேட்கிறார்கள். மீண்டும் சுந்தரி கேட்கிறாள். அதற்கும் நீண்ட நேரம் அமைதியாக இருந்துவிட்டு, நீங்க மண்டபத்த விட்டு வெளிய போனா நான் இந்த கல்யாணத்த பண்ணிக்குறேன் என்கிறாள் மீனா. மண்டபத்தில் அனைவருமே அதிர்ச்சியடைகிறார்கள்.

மீனாவின் அம்மா உடனடியாக கோபப்பட்டு சுந்தரிதான் இந்த கல்யாணத்துக்கு காரணமே என்று கூற ஆரம்பித்த நிலையில், சுந்தரி தான் இந்த கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறுகிறேன் என்கிறார். அதற்கு சித்து தனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் என்கிறான். உடனே சுந்தரி சித்துவை சமாதானம் செய்கிறாள். சித்து, சித்துவின் அப்பா மணி என அனைவரும் ஏதோ சொல்ல முயற்சிக்க அப்போதும் சுந்தரி தான் வெளியே போவதாக கூறி செல்கிறாள். கிருஷ்ணாவும், மாலினியும் அவள் கூடவே செல்கிறார்கள். ஆனால் சுந்தரி அவர்களைத் தடுத்து நீங்கள் சித்துவுக்கு ஆதரவாக இருக்கும்படி கூறிவிட்டு புறப்பட தயாராகிறார்.

அந்த நேரத்தில் சித்து தான் இந்த கல்யாணத்த பண்ணிக்க மாட்டேன் என்று கூறுகிறான். மீண்டும் சுந்தரி சித்துவை சமாதானப்படுத்தி கல்யாணம் செஞ்சுக்கோ என்று கூற நட்பு மீது சத்தியம் என்று செய்கிறாள்.

சுந்தரி கல்யாண மண்டபத்தை விட்டு வெளியே வருகிறார். அங்கு கூடியிருந்த மக்கள் அவளைப் பற்றி தப்பு தப்பாக பேசுகிறார்கள். இவளுக்கு அந்த பையன் மேல ஆசைனா அவளே கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான அத விட்டு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்க நினைக்குறாளே என்று பேசுகிறார்கள். அங்கு கார்த்திக்கும் வந்திருக்கிறார். என்ன அத்தனை பேருக்கு முன்னாடி செருப்பால அடிச்சல்ல. இப்ப அந்த பொண்ணு உன்ன ஊருக்கு முன்னாடி செருப்பால அடிச்ச மாதிரி வெளிய தொரத்தி அனுப்பிட்டால்ல என்று கூறுகிறார்.

அந்த நேரத்தில் மணப்பெண்ணான மீனா மண்டபத்தை விட்டு வெளியே வருகிறாள். அப்போது உனக்கு இன்னும் அவமானம் முடியல உன்ன தொரத்திட்டு வருது பாரேன். மெய்ன் பிக்சரே இப்பதான் ஆரம்பிக்கப்போகுது கொஞ்சம் திரும்பி பாரேன். கதற கதற அழ ரெடி ஆகிக்கோ என்று கூறுகிறான் கார்த்திக்.

ஆனால் டுவிஸ்ட்டாக மீனா வந்த உடன் சுந்தரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள். இதனால் கார்த்திக் ஷாக் ஆகிறான். என்ன நடந்தது என்று புரியாமல் திணறுகிறான். மீனா சில பல வசனங்களைப் பேசி சுந்தரியையும் மற்றவர்களையும் மகிழ்விக்கிறார். நீங்கதான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாள். மகிழ்ச்சியின் உச்சிக்கே போன சுந்தரி, கார்த்திக்கை நோக்கி பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 26th May 2023

சித்து, மீனா திருமணத்தை நிறுத்த நாடகம் போட்ட கார்த்தியின் முகத்திரையைக் கிழித்து மீனா சுந்தரியை உறவினர்களுக்கு முன் பெருமைபடுத்திவிட்டார். இதனால் கடுப்பில் இருக்கும் கார்த்தி அடுத்து என்ன செய்வான் என்று தெரியாமல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!