காணாமல் போனது பொண்ணு இல்ல..மாப்பிள்ளை! டிவிஸ்ட் ஆன கதை!
Sundari Today Episode
சுந்தரி இன்றைய எபிசோட்
Sundari Today Episode-என் தங்கச்சிப் பொண்ணு ஓடிப்போயிட்டா. நா நம்பியிருந்த பொண்ணு இப்படி ஓடிப் போயிட்டாளே என அழுது புலம்புகிறார். சித்துவின் அப்பா டுவிஸ்ட் வைத்து சித்துவை சுந்தரி கட்டிக் கொள்ள வேண்டும் என குண்டைத் தூக்கி போடுகிறார். அவருக்கு சப்போர்ட் செய்ய ஜானகி அம்மாவும், மல்லிகாவும் இதில் இறங்குகிறார். ஆனால் சுந்தரி மாட்டவே மாட்டேன் என்கிறார். ஆனாலும் மல்லிகாவும், ஜானகியும் அவள் மனதை மாற்ற ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
மல்லிகா தான் சட்டப்படி எந்த பிரச்னையையும் எதிர்கொள்கிறேன் என்கிறார். சித்துதான் உனக்கு சரியான ஜோடி அவனை திருமணம் செய்து கொள் என்று கூறுகிறார். ஜானகி அக்காவும் சுந்தரியை எவ்வளவோ சொல்லியும் சுந்தரி கேட்பதாக இல்லை. இப்படி எவ்ளோ சொல்லியும் கேக்காம இருக்காளே என்று ஜானகி அவளை வற்புறுத்தி மேடையில் அமர்த்துகிறார். சித்துவையும் அமர வைத்துவிட்டு ஐயரிடம் மந்திரம் சொல்ல சொல்லி, கெட்டி மேளம் கொட்ட திருமண தாலியை எடுத்து கொடுக்கின்றனர்.
மணக்கோலத்தில் சித்து, சுந்தரிக்கு தாலி கட்டுகிறான். அனைவரும் மகிழ்ச்சியுடன் அவர்களை வாழ்த்துகின்றனர். திடீரென யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. அண்ணா அண்ணா என சித்துவின் அத்தை கதவைத் தட்டுவதை கேட்டு மணி எழுந்து வருகிறார். சித்துவைக் காணவில்லை என்று அவரிடம் தங்கை சொல்வதை கேட்டு என்னது காணாம போனது சித்துவா. மீனா காணாமல் போகலியா என்று கேட்க, அடுத்து மண்டபமே பதைபதைத்து நிற்கிறது.
மணி சித்துவின் நண்பர்களிடம் பேச கால் செய்யலாம் என போனை எடுக்க, கொஞ்ச நேரத்தில் சித்து அங்கிருந்து வண்டியில் வருகிறான். அதைப் பார்த்து அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படி சித்து வந்ததும் எங்க போன சித்து என்று கேட்க, சுந்தரிகிட்ட சொல்லிட்டுதான போனேன் என்று கூறுகிறான். அந்த நேரத்தில் மீனாவும் அதைக் கேட்டு பொறாமைப் படுகிறார்.
சுந்தரி அவர்களை உள்ளே வரச் சொல்லிவிட்டு, மணமகள் அறைக்கு செல்கிறார். அங்கே ஏற்கனவே வந்து அமர்ந்திருக்கிறாள் மீனா. கூடவே அவளது தோழியும் இருக்கிறாள். லிப்ஸ்டிக் ஓகே வா.. டிரெஸ் ஓகே வா என்று கேட்டு ஒட்டியாணம் கலர் ஓகே வா வேற கலர் மாத்திக்கலாமா என்று கேட்க எல்லா கேள்விக்கும் பட்டும் படாமலும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாள் மீனா.
சுந்தரிக்கு இதனால் கொஞ்சம் மனக்குழப்பம் ஏற்பட்டு அதை சித்துவிடம் கூறுகிறாள். ஒருவேளை மீனாவுக்கு கல்யாணத்தில் இஷ்டம் இல்லையோ என்று யோசிக்க அது அப்படி இல்லை மீனா உன்னத்தான் கட்டிப்பேன்னு அடம்பிடிச்சி ஓடி வரக் கூட தயாரா இருந்தா என சுந்தரி கூறுகிறாள். இதனிடையே சித்துவின் அப்பா மணி கண்ணீருடன் இருக்க அங்கே வந்த மல்லிகா ஏன் அழுகிறீங்க என்று கேட்கிறாள். அதற்கு தன் மனைவியை நினைத்து அழுவதாக கூறுகிறார் மணி. அவள் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்கிறார். அதற்கு மல்லிகா ஆறுதல் தெரிவிக்கிறார்.
கார்த்திக், அருண், அவன் கூட்டாளி என மூவரும் மண்டபத்துக்கு முன் சந்திக்கிறார்கள். கார்த்தி கையில் ஃபோட்டோக்கள் சிலவற்றை வைத்திருக்கிறார். அதனைப் பார்த்த அருண் இதைப் பார்த்தா கல்யாணம் நின்னுடுமே என்று கூற, கூட்டாளியிடம் இதனை மொய்க் கவரில் வைத்து உள்ளே மக்களிடம் கொடுக்க யோசனை கூறுகிறான். இதனை சொன்னபடியே செய்து முடிக்கிறான் கூட்டாளி. மக்கள் இந்த புகைப்படத்தை எடுத்து பார்க்கிறார்கள். என்ன இது என ஆளாளுக்கு பேசுகிறார்கள். சுந்தரியின் முகம் மாறுகிறது.
சுந்தரி நேற்று எபிசோட்
சுந்தரியின் புத்திசாலித்தனத்தால் இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்கிறது. தன் தவறை உணர்ந்த மீனாவின் அப்பாவும் சித்து அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு ஒன்று சேர்ந்துவிட்டார். இதனால் சித்துவுக்கும் மீனாவுக்கும் கல்யாணம் செய்து வைக்கலாம் என முடிவு செய்கின்றனர். சுந்தரியே கல்யாணத்தை முன்னின்று நடத்த கேட்டுக் கொள்கின்றனர். இதனால் சுந்தரிக்கு மதிப்பு கூடுகிறது. இதனை விரும்பாத கார்த்திக் அந்த கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுகிறான். மீனாவைச் சந்திக்கிறான் கார்த்திக்.
சுந்தரிக்கும் சித்துவுக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக சந்தேகத்தை எழ வைக்கிறான் கார்த்திக். இதனால் மீனாவுக்கு கடுப்பாக இருக்கிறது. இரவு நேரத்தில் இருவரும் சேர்ந்து சிரித்து சிரித்து பேசியதை நேரில் பார்த்த மீனா இந்த கல்யாணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்க, அடுத்த நாள் திருமணமும் நடக்க எல்லா ஏற்பாடுகளும் நடக்கின்றன.
திருமணம் நிகழும் நாள் காலையும் வந்தது. உறவினர்கள், நண்பர்கள் என மண்டபத்துக்கு வருகை தருகின்றனர். அப்போது மல்லிகாவும் வருகிறார். சித்துவின் அப்பா, கார்த்திக் சுந்தரியை ஃபோனில் மிரட்டியதை மல்லிகாவிடம் கூறிவிடலாமா என யோசித்துவிட்டு பின் அங்குள்ள பிஸியில் மறந்துவிடுகிறார். அப்போது கார்த்திக் மீண்டும் சுந்தரிக்கு கால் செய்கிறான். அப்போது சுந்தரி இவன் ஏதோ திட்டமிட்டிருக்கிறான் என்பதை உணர்கிறாள்.
அந்த நேரத்தில் ஐயர் மணப்பெண்ணின் சித்தப்பா, பெரியப்பா முறை ஆட்களை அழைக்கிறார். சங்கல்பம் செய்யவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் அப்படி யாரும் இல்லை சங்கல்பம் வேண்டாம் நேரடியாக கல்யாணம் செய்திடுங்கள் என்று கூறுகிறார் மீனாவின் அம்மா. மீனாவின் தோழியை அழைத்து, மேலே சென்று மீனாவைக் கூட்டி வரச் சொல்கிறார்.
கிருஷ்ணாவும், சித்துவும் மணமகன் அறையிலிருந்து கிளம்புகிறார்கள். அப்போது சுந்தரி அங்கிருந்து வருகிறார். மணமேடைக்கு வரச் சொல்றாங்க வாங்க என்று மாப்பிள்ளையை அழைத்துச் செல்கிறார். சில கேலி கிண்டல்களைத் தொடர்ந்து அப்படியே கீழே மணமேடைக்கு செல்கிறார்கள் மூவரும்.
மீனாவின் தோழி மணமகள் அறைக்குச் சென்று பார்க்கும்போது அங்கு மீனா இல்லை. நன்கு தேடிப்பார்த்தும் மீனாவைக் காணவில்லை என்பதால் பதைபதைத்துக் கொண்டே எங்கெ சென்றாள் எனத் தேட, அங்கு எழுதி மறைத்து வைக்கப்பட்டிருந்த லெட்டர் ஒன்று கிடைக்கிறது. அதில் என்னைத் தேட வேண்டாம், எனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. அதனை ஓடி வந்து மணமேடையில் கூடியிருந்த உறவினர்களிடம் காட்ட, அடடே பொண்ணு ஓடிப்போச்சு என்று அனைவரும் பேச ஆரம்பிக்கின்றனர்.
மண்டபமே பரபரக்கிறது. நான்லாம் சொன்னேன்ல எப்ப பாத்தாலும் மாப்ள பக்கத்துல ஒரு பொண்ணு இருக்குன்னு. கல்யாண பொண்ணுக்கு இந்த விசயம் தெரிஞ்சதும் ஓடி போச்சுப்போல. ஃபிரண்டுங்குற பேர்ல இப்படி ஒரு பொண்ண கூடவே மாப்பிள்ள வச்சிருந்தா எந்த பொண்ணுதான் பொருத்துக்கும் என ஆளாளுக்கு பேச மீனாவின் அப்பாவும், அம்மாவும் அழுது மன்னிப்பு கேட்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சித்துவின் அப்பா, மீனா மீது கோபத்தில் இருக்கிறார்.
இதில் கார்த்திக்கின் வேலை நிச்சயமாக இருக்கிறது. அதற்காகத்தான் அடிக்கடி கால் செய்துகொண்டே இருந்திருக்கிறான் என்று சுந்தரி உணர்வதற்குள் மீண்டும் கால் செய்கிறான் கார்த்திக்.
சித்துவின் அப்பா மணி சித்துவிடம் மன்னிப்பு கேட்கிறார். மீனாவும் இதனை ஒத்துக் கொண்டுதான் கல்யாணத்துக்கு சம்மதித்தார் என்று நினைத்தேனே. கலெக்டர் ஆகி கௌரவமாக வாழ வேண்டிய மகனை நானே அசிங்கப்படுத்திட்டேனே என்று அழுகிறார். கார்த்திதான் இதற்கு காரணம் என்று சுந்தரி சொல்லியும் சித்துவின் அப்பா மணி குத்துவிளக்கை எடுத்து குத்திக் கொண்டு சாக நினைக்கிறார். மண்டபமே நிலைகுலைந்து போகிறது.
என் தங்கச்சிப் பொண்ணு ஓடிப்போயிட்டா. நா நம்பியிருந்த பொண்ணு இப்படி ஓடிப் போயிட்டாளே என அழுது புலம்புகிறார். சித்துவின் அப்பா டுவிஸ்ட் வைத்து சித்துவை சுந்தரி கட்டிக் கொள்ள வேண்டும் என குண்டைத் தூக்கி போடுகிறார். அவருக்கு சப்போர்ட் செய்ய ஜானகி அம்மாவும், மல்லிகாவும் இதில் இறங்குகிறார். ஆனால் சுந்தரி மாட்டவே மாட்டேன் என்கிறார். ஆனாலும் மல்லிகாவும், ஜானகியும் அவள் மனதை மாற்ற ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
சுந்தரி நாளைய எபிசோட்
சித்து, மீனா திருமணத்தை நிறுத்தி சுந்தரியை அவமானப்படுத்த நினைக்கிறான் கார்த்தி. அவன் திட்டப்படி சுந்தரி, சித்து இடையே தவறான உறவு இருப்பதாக மீனாவின் மனதில் வன்மத்தை இறக்கிவிட்டிருக்கிறான். இதனை சமாளித்து சித்து, மீனா திருமணத்தை நடத்தி வைப்பாரா சுந்தரி.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu