Sundari மண்டபத்தில் நடக்கும் கலாட்டா! சித்து திருமணம் நடக்குமா?

Sundari மண்டபத்தில் நடக்கும் கலாட்டா! சித்து திருமணம் நடக்குமா?
X
சித்துவின் திருமணம் நடக்குமா அல்லது பிரச்னையில் முடியுமா என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 20th May 2023

மீனா கதைவைத் திறந்து பார்க்கும்போது அங்கே சித்துவுடன் சுந்தரி சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்கிறார். இதனால் சுந்தரி மீது மீனாவுக்கு கோபம் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் ஏன் இவர்கள் பேச வேண்டும் என தனது மனதில் சந்தேகப் பேய்க்கு இடம் கொடுக்கிறாள் மீனா. இது கல்யாண மண்டபம் வரை எதிரொளிக்கிறது.

சித்துவின் திருமணம் நடக்குமா அல்லது பிரச்னையில் முடியுமா என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அருணுடன் சேர்ந்து கார்த்திக் செய்யும் செயல்களால் சுந்தரிக்கு மேலும் மேலும் சிக்கல் உருவாகிக் கொண்டிருக்கிறது. நாளைய எபிசோடில் பெரிய டிவிஸ்ட் காத்திருக்கிறது.

சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 19th May 2023

அருண் கார்த்திக்கை சந்திக்க விரும்புவதாக கூறி பொது இடம் ஒன்றுக்கு வரச் சொல்லியிருக்கிறான். காரில் வந்து இறங்கும் கார்த்தி அவன் மீது கோபப்படுகிறான். நீங்க சுந்தரி, கிருஷ்ணா கண்ணுல மாட்டிக்க கூடாதுனுதான் இங்க வராதனு சொன்னேன் என்று கூறினார். அப்போது அருண் கோபப்படுகிறான். நீ வேடிக்கைதான் பாத்துக்கிட்டு இருக்க, சுந்தரி நல்லா சந்தோஷமாதான் இருக்கா என்று கோபப்படும் அருணிடம் கல்யாண மண்டபத்துல என்ன நடக்குதுனு மட்டும் பாரு என்று கூறிவிட்டு செல்கிறான் கார்த்திக்.

மீனா பியூட்டி பார்லருக்கு செல்கிறாள் அங்கு தன் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தன் தோழியிடம் கூறிக் கொண்டிருக்கிறாள். அங்கு பேசியல் முடிந்து மீனா வெளியில் கிளம்பும்போது யாரோ ஒருவர் மேகஸினை மடித்து தன் முகத்தை வெளிப்படுத்திகிறார். அது நம்ம கார்த்திக் தான். அடுத்து கார்த்தி என்ன என்ன ஆட்டம் ஆடப்போறானோ?

சுந்தரிக்கும் சித்துவுக்கும் இடையில் என்ன உறவு என மீனாவின் அப்பா, அம்மாவுக்கு லைட்டாக சந்தேகம் வருகிறது. இதனைக் கேட்கத் தயக்கமாக இருக்கிறது. ஆனால் யாரிடம் கேட்பது எப்படி கேட்பது என தயக்கத்திலேயே இருக்கிறார்கள். கிருஷ்ணாவை அழைத்து தயங்கி தயங்கி கேட்கிறார்கள். சித்துவும் சுந்தரியும் காதலிக்கிறார்களா என்று தயங்கி கேட்டவர்களிடம் முழு கதையையும் சொல்கிறான் கிருஷ்ணா.

சுந்தரி ஐஏஎஸ் படிக்க சென்றது, அங்கே சுந்தரியும் சித்துவும் நண்பர்களானது. இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தபோது சித்துவுக்கு சுந்தரி மீது இன்டரெஸ்ட் வந்தது. அதை தன் அப்பாவிடம் சொல்ல, அவரோ நேரடியாக சுந்தரியை பொண்ணு கேட்க முருகன் வீட்டுக்கு சென்று அங்கே பிரச்னை ஆனது என தொடர்ந்து கதையைக் கூறினார். போலீஸ் ஸ்டேசனில் இருந்து சண்டைப் போட அங்கேதான் சுந்தரிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை அறிந்து கொள்கிறார் சித்துவின் அப்பா. இதனால் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து முருகன் காலில் விழ, இருவரது குடும்பமும் அப்போதிருந்து நட்பு பாராட்டத் தொடங்கிவிட்டது.

சித்துவிடம் சுந்தரி சண்டை போட்டது இனிமேல் தன்னிடம் பேசக்கூடாது என்று சொன்னது, பின் சித்துவின் உண்மையான குணத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தது என அனைத்தையும் சொல்கிறான் சித்து. இதிலிருந்து மீனாவின் அம்மா, அப்பா இருவரும் உண்மையைப் புரிந்து கொள்கின்றனர். புரிந்துகொண்டதை அடுத்து தங்களுக்கு இப்போது சந்தேகம் விளங்கிவிட்டது. சித்துவுக்கு ஒருவேளை சுந்தரியை பிடித்து நாங்கள் குறுக்கே வந்துவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது. அதற்காகத்தான் கேட்டோம் என்று கூற, நீங்களே சொல்லுங்க அப்படி ஒன்னு சித்து மனசுல இருந்தா, சித்துவ கேக்காம அவரு அப்பா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவாரா அத சுந்தரியே நடத்தி வைப்பாளா. என் தங்கச்சி அப்படிபட்டவ இல்ல என்று கூறுகிறார்.

இரவு வேளையில் மீனா தன் அறையின் கதவைத் திறந்து பார்க்கிறாள். அங்கே அப்போதுதான் சித்துவுடன் சுந்தரி நின்று பேசிக்கொண்டிருக்கிறாள். இரவு இத்தனை மணி ஆகியும் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று மீனா கடுப்பாகி நிற்கிறாள்.

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 21st May 2023

சித்து, மீனா திருமணத்தை நிறுத்தி சுந்தரியை அவமானப்படுத்த நினைக்கிறான் கார்த்தி. இதனை அருணிடமும் கூறிவிட்டு வருகிறான். அடுத்து என்னென்ன நடக்கும் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!