Sundari அனுவிடம் கணவரைப் பற்றி சொன்ன சுந்தரி! வீடியோவால் அசிங்கப்பட போகும் கார்த்தி!
சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 1st May 2023
சுந்தரியிடம் இந்த விழாவுக்கு மாமா, அக்காவைக் கூட்டி வரவேண்டாம் என்று காலில் விழுந்த கதறியிருந்தார் கார்த்தி. இதனை மகிழ்ச்சியாக கிருஷ்ணாவிடம் கூறி செய்து காண்பித்தார். ஆனால் வளைகாப்பு விழாவில் மாட்டிக் கொண்டு உண்மை உடைந்தால் அனுவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என வருத்தப்படுகிறார் சுந்தரி. கார்த்தி சுந்தரியின் காலைப் பிடித்து கெஞ்சியிருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது மாமாவை வளைகாப்பு விழாவுக்கு அழைத்துச் சென்றாள் சுந்தரி.
கார்த்திக்கின் சூழ்ச்சியால் எண்ணெய் வழுக்கி கீழே விழந்த அனுவை மருத்துவமனையில் சென்று பார்க்கின்றனர் குடும்பத்தினர் அனைவரும். இதனால் அந்த இடமே பரபரக்கிறது. முன்னதாக கார்த்தியை செருப்பால் அடிக்கிறாள் சுந்தரி. தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று பொய் சொல்லி ஏமாற்றிய கார்த்தியை தனது செருப்பை கழற்றி அடிப்பதை அனுவின் அம்மா, கார்த்தியின் நண்பர் கிருஷ்ணா, மருத்துவர் என பலரும் பார்க்கின்றனர்.
அருணின் கூட்டாளி ஒருவனும் இதனை வீடியோ எடுத்து வைத்திருக்கிறான். இதை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டுகிறான் அவன்.. இதனால் இந்த வீடியோ வெளியாகினால் கார்த்தி அசிங்கப்படுவது மட்டுமின்றி அதை சமாளிக்க முடியாமல் திணறுவான். அருணின் கூட்டாளி அந்த வீடியோவை வைத்து மிரட்டுகிறான். கார்த்திக் இதனால் மிகவும் பதற்றத்தில் இருக்கிறான். ஒரு பொம்பள புள்ள அத்தன பேரு மத்தியில வச்சி ஒரு ஆம்பளய அடிச்சா அது எவ்ளோ பெரிய அவமானம் என அவனை எமோசனலாக மிரட்டுகிறான். அன்னைக்கு பேச முயற்சிக்கும்போது என் கால்ல கட் பண்ணிங்களே இப்ப என்ன பண்ண போறீங்க என்று கேட்கிறான்.
அந்த நேரத்தில் அனு, கார்த்திக்கு கால் செய்கிறாள். அப்போது அருணை நீங்கள் பார்க்க வேண்டும் இல்லையென்றால் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூறுகிறான். இதனால் அருணை சிறையில் சென்று பார்ப்பது என முடிவெடுக்கிறான் கார்த்தி.
இப்படி இருக்கையில் சுந்தரி அனுவிடம் தன் கணவனைப் பற்றி பேசுகிறாள். தன்னுடைய கணவனுக்கு ரோசம் மானம் இருந்திருந்தால் அவன் நாண்டுக்கிட்டு செத்திருப்பான் என சுந்தரி கூறுகிறாள்.
சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 29th April 2023
கார்த்திக், அனு பிரச்னை கிட்டத்தட்ட குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், சுந்தரியின் கணவன் வேறு, தன் கணவன் கார்த்திக் வேறு என் நினைத்து சுந்தரியிடம் அவள் கணவனின் பித்தலாட்டத்தை நிரூபிக்க நினைக்கிறாள் அனு. சுந்தரிக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும், அவளுக்கு குழந்தை பிறக்காது என்பது பொய் என்பதை நிரூபிக்கவும் பல திட்டங்களைத் தீட்டுகிறாள் அனு. அதற்கு சித்து, கிருஷ்ணா, அனுவின் நண்பர், இன்னொரு மருத்துவர் என அனைவரும் உதவுகின்றனர். ஒருவழியாக அவளுக்கு குழந்தை பிறக்கும் என்பது தெரியவந்துள்ளது. சுந்தரியின் கணவன் அவளிடம் பொய் கூறியிருக்கிறான் என அனு அனைவருக்கும் சபையில் போட்டு உடைக்க நினைக்கிறாள். அதற்காக திட்டமிட்டு தனக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறாள்.
அதே நேரம் சுந்தரியின் அம்மா இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் வைத்து அனைத்து உண்மையையும் உடைக்க திட்டமிட்டிருக்கிறார்.
அனுவும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் எல்லா உண்மையையும் உடைத்து சுந்தரியின் கணவன் முகத்திரையைக் கிழிக்க முடிவு செய்துள்ளார். அனுவின் அம்மா இதுவிதிப்படி நடக்கட்டும் ஆனால் அனுவுக்கும் வயிற்றில் இருக்கும் வாரிசுவுக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாது என நினைக்கிறார்.
இந்நிலையில், சுந்தரியிடம் இந்த விழாவுக்கு மாமா, அக்காவைக் கூட்டி வரவேண்டாம் என்று காலில் விழுந்த கதறியிருந்தார் கார்த்தி. இதனை மகிழ்ச்சியாக கிருஷ்ணாவிடம் கூறி செய்து காண்பித்தார். ஆனால் வளைகாப்பு விழாவில் மாட்டிக் கொண்டு உண்மை உடைந்தால் அனுவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என வருத்தப்படுகிறார் சுந்தரி.
அனுவுக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக தொடங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் சுந்தரி, அவளது அம்மா, முருகன் மாமா, அவரது மனைவி, மகள், கிருஷ்ணா ஆகியோர் ஒரே காரில் ஊரிலிருந்து அனு வீட்டுக்கு கிளம்பி வந்துகொண்டிருக்கிறார்கள். வந்த வேளையில் கலகலப்பாக இருக்க பாடல்களைப் போட்டுக் கொண்டு காரை ஓட்டுகிறார் கிருஷ்ணா.
இங்கே தான் மாட்டிக் கொள்வோம் என்கிற எண்ணத்தில் அந்த விழாவை நிறுத்திவிட திட்டமிடுகிறார் கார்த்திக். அதற்காக அவர் போட்டிருந்த திட்டத்தில் மாட்டிக் கொள்கிறார் அனு. இதனால் கீழே விழுந்த அனுவை அவசர அவசரமாக மருத்துவமனை அழைத்துச் செல்கின்றனர். அங்கு அனுவை அனுமதித்திருப்பதை அறிந்த சுந்தரியின் அம்மா கோபத்தில் வந்து கார்த்திக்கின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கிறார். அப்போது கோபத்தின் உச்சிக்கே சென்ற நிலையில் அவருக்கு மீண்டும் பேச்சு வந்துவிடுகிறது.
கார்த்திக்கின் சட்டையைப் பிடித்து தன் மகளின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டாயே என்று கோபத்தில் சண்டை போடுகிறார் சுந்தரியின் அம்மா. இதனால் மருத்துவமனையே பிரளயம் ஆகிறது. அங்கே அனு எந்த பிரச்னையும் இல்லையென்றால் நான் இப்போதே வீட்டுக்கு போகிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் டாக்டரோ ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கலாமே என்று கேட்கிறார்.
என் மகளின் வாழ்க்கையை கேலிப் பொருள் ஆக்கிட்டேயேடா பாவி என்று கோபத்தில் திட்டும்போது அங்கிருந்து சுந்தரி வருகிறார். அனுவுக்கு அடி பட்டிருப்பதை அறிந்த சுந்தரி வேக வேகமாக வந்து அவளைப் பார்க்கிறாள். அனுவுக்கு ஒன்றும் பிரச்னையில்லை என்று அறிந்ததும் சற்று நிம்மதி அடைகிறார்.
அந்த நேரத்தில் அனு சுந்தரியிடம் எல்லா உண்மையையும் போட்டு உடைக்கிறார். நான், கிருஷ்ணா, சித்து, அப்றம் என் நண்பர் 4 பேரும் சேர்ந்து உன்னிடம் பொய் கூறி உனக்கு டெஸ்ட் எடுத்து பார்த்தோம். அதில் உனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதெல்லாம் பொய் என்பதை கண்டறிந்தோம் என்று கூறிவிட்டார்.
இதனை அறிந்த சுந்தரி ஷாக் அடைந்து உடனடியாக கார்த்திக்கை நோக்கி கோபத்தில் வருகிறார். அங்கு சுந்தரியின் அம்மா சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் என்ன ஆகும் என்பதை இன்று இரவு தெரிந்து கொள்வோம்.
சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 2nd May 2023
சுந்தரிக்கு குழந்தை பாக்கியம் இருப்பது அவளுக்கே தெரிந்துவிட்டது. இது வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் தெரிகிறதா இல்லை அதனை சொல்லாமல் மறைக்கிறாளா என்பதை அடுத்த வாரம் காண இருக்கிறோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu