Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!

Sundari நீ ஏன் சுந்தரியைக் கட்டிக்க கூடாது? அனு கொடுத்த அதிர்ச்சி!
X
சுந்தரியைத் திருமணம் செய்ய அனு தனது நண்பர் சிவாவிடம் கேட்டுக்கொள்கிறாள். இதனால் சுந்தரி அதிர்ச்சி அடைகிறாள்.

சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 1st June 2023



சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 31st May 2023

சித்து - மீனா திருமணமும் நடக்கிறது. மகிழ்ச்சியாக சித்துவை மணக்கிறாள் மீனா. அப்போது சுந்தரியும் மகிழ்ச்சியடைகிறாள். வீட்டுக்கு சென்று திருமணம் முடிந்த கையோடு குடும்பமாக உக்காந்து பேசுகிறார்கள். வழக்கமாக சுந்தரியும் மாலினியும் கிருஷ்ணாவை வாருவது போல இப்போதும் வாருகின்றனர். சித்துவும் கிருஷ்ணாவைக் கலாய்க்கிறான். மகிழ்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கின்றனர். அந்த இடத்தில் மல்லிகாவும் இருக்கிறார். அவர் அனைவரையும் விருந்துக்கு கூப்பிட நினைக்கிறார்.

வேறு யாரும் விருந்துக்கு அழைப்பார்களா என்பதை உறுதி செய்துகொள்ள நினைக்கும் வேளையில் தங்களுக்கு வேறு யாரும் இல்லை என்று கூற, மல்லிகா மீனாவும் சுந்தரி மாதிரியே என் பொண்ணுதான்மா என்று அன்பு மழை பொழிகிறார். அவர்களை வீட்டுக்கு அழைத்துவிட்டு செல்கிறார்.

அனுவிடம் நடந்ததைக் கூறி நாளைக்கு விருந்து ஏற்பாடு செய்யப்போகிறேன் என்று கூறியிருப்பார் போல, அனு கார்த்திக்கிடம் இதனை தயங்கி தயங்கி சொல்கிறார். அந்த விருந்துக்கு டாக்டர் சிவாவையும் வர வைக்க அனுமதி கேட்கிறார். அதனால என்ன உன் இஷ்டம் என்று கார்த்திக் சொல்லிவிடுகிறான்.

அடுத்த நாள் விருந்துக்கு சித்து, மீனா, கிருஷ்ணா , மாலினி, சுந்தரி ஆகியோர் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு கார்த்திக்கும் அமர்ந்திருக்கிறான். அனைவருக்கும் நான் வெஜ் வகை பரிமாறப்படுகிறது.

கொஞ்ச நேரம் கார்த்திக்கை எல்லாரும் மறைமுகமாக கலாய்த்து வருகின்றனர். அனைவரும் சுந்தரியின் கணவர் பற்றியே பேச, கார்த்திக் கடுப்பானாலும் அதை வெளிக்காட்டாமல் இருந்து வருகிறான். அந்த நேரத்தில் டாக்டர் சிவாவும் கையில் பரிசுடன் வீட்டுக்கு வருகிறார். வந்தவரை அனைவரும் வரவேற்க எப்படி இருக்கீங்க என்று சித்து கேட்கிறான். மீனாவும் இவர்தான் டாக்டரா என்று கேட்டு வரவேற்கிறார். பதிலுக்கு சிவா அவர்களை வாழ்த்தி கையில் கொண்டு வந்த பரிசைக் கொடுக்க நினைத்து, பின் சாப்பிட்டுவிட்டு அப்றமா கொடுக்கலாம் என்றதும் சாப்பிட உட்காருகிறான்.

அந்த நேரத்தில் அனு அவனைத் திட்டி சாப்பிட சொன்னதும் உடனே கை கூட கழுவாம உக்காந்துடுவியா போ போயி கைய கழுவிட்டு வா என்று கூறுகிறாள் மீனா. சமயத்துல நான் டாக்டரா இல்ல இவ டாக்டராங்குறதே மறந்து போயிடுது என்று அனுவைக் கூறிவிட்டு கை கழுவ செல்கிறான் சிவா. அங்கு கைக்கழுவிக் கொண்டு இருக்கும் சமயத்தில் அனு கார்த்திக்கை வாரி பேசக்கூடாது என்று தெரிவித்துவிட்டார். தானும் அவனை கலாய்த்து எதுவும் செய்யமாட்டேன் வேணும்னா பாராட்டுறேன் என்று கூறுகிறான்.

சாப்பாடு மேசையில் அமர்ந்து கார்த்திக்கை பாராட்டிவிட்டு சுந்தரி புருசன் கேடு கெட்டவன், அவன் உருப்படமாட்டான் என்று கடுமையாக பேசி கலாய்க்கிறான். சாப்பாடு முடிந்ததை அடுத்து பரிசு கொடுத்து வாழ்த்துகிறார் அனு. சிவாவும் தன் கிஃப்டை கொடுத்து வாழ்த்துகிறான். சித்துவுக்கு ஹனிமூன் எங்க போறீங்க என்று அனு கேட்க, எக்ஸாம் பற்றி சித்து கூறுகிறான். ஐஏஎஸ் எக்ஸாம் எழுத சித்து கோயம்புத்தூருக்கும், சுந்தரி தென்காசிக்கும் செல்ல இருக்கிறார்கள். சித்துவுடன் அவனது மனைவி மீனாவும் பயணிக்க இருக்கிறார். அப்படியே சுந்தரி தனியாக தென்காசி செல்ல இருக்கிறார். இதை எதிர்பார்க்காத கார்த்திக் கடுப்பில் இருந்தும் எதுவும் பேச முடியாத நிலைமையில், அவனை அருண் அழைக்கிறான்.

அனு வீட்டுக்கு அருகிலுள்ள பார்க்கில் அருணை சந்திக்கிறான் கார்த்திக். சுந்தரி ஐஏஎஸ் எக்ஸாம் எழுத தென்காசி செல்வதாக கூறுகிறான். இதனால் அவர்கள் பெரிய திட்டம் ஒன்றை தீட்டுகிறார்கள்.

சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 2nd June 2023

ஐஏஎஸ் எக்ஸாம் எழுத சித்து கோயம்புத்தூருக்கும், சுந்தரி தென்காசிக்கும் செல்ல இருக்கிறார்கள். சித்துவுடன் அவனது மனைவி மீனாவும் பயணிக்க இருக்கிறார். அப்படியே சுந்தரி தனியாக தென்காசி செல்ல இருக்கிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!