Sundari மீனா அப்பாவை சமாதானம் செய்ய புறப்படும் சுந்தரி!
சுந்தரி இன்றைய எபிசோட் | sundari serial today episode youtube 15th May 2023
அப்பத்தாவும் கிருஷ்ணாவும் நாடகம் ஆடி மீனா வீட்டுக்குள் நுழைகின்றனர். அப்பத்தா தன்னை தன் மகன் வெட்ட வருவதாக கூறி மீனா அப்பாவிடம் சொல்கிறார். அப்பத்தாவை காக்க மீனாவின் அப்பா ரௌடி வேடமிட்டு வந்த கிருஷ்ணாவை மிரட்டுகிறார். இதனால் பயந்து போனதாக நாடகமாடும் கிருஷ்ணா ஓடி விடுகிறார். இதனையடுத்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என மீனாவின் அப்பா கூற அதனை வேண்டாம் என்று அப்பத்தா சொல்லிவிட்டு வெளியில் வந்துவிடுகிறார்.
ரௌடி வேடமிட்ட கிருஷ்ணா நேராக சென்று ஒரு காரில் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் கீற அங்கிருந்து சுந்தரி வருகிறாள். அவளிடம் தன் நடிப்பு எப்படி என்று கேட்க அருமை என்று பாராட்டுகிறாள். அடுத்து அப்பத்தாவை எங்கே என்று கேட்கிறாள். அதோ வருது பாரு கிழவி என்று திரும்பி பார்க்கிறான் கிருஷ்ணா. அப்போது அங்கிருந்து அப்பத்தா ஓடி வருகிறாள். கோபத்துடன் வந்த அப்பத்தா கிருஷ்ணாவை பொள பொள வென்று பொளக்கிறார். குறுக்கிட்ட சுந்தரி ஏன் அண்ணன அடிக்கிறீங்க அப்பத்தா என்று கேட்க, அவர் கிருஷ்ணா என்னை வார்த்தைக்கு வார்த்தை கிழவி என்று கூறிவிட்டதாக சொல்கிறார்.
இந்த பக்கம் சுந்தரி சித்து வீட்டுக்கு வருகிறார். அங்கு கிருஷ்ணா, மாலினியும் இருக்கிறார்கள். சித்துவின் அப்பாவை வாங்க வாங்க போகலாம் அவரைப் போய் சந்திக்கலாம் என்று கூறுகிறாள். கிளம்புங்க அங்கிள் என்றதும் சித்துவின் அப்பா வர மறுக்கிறார். எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லம்மா என்று கூறுகிறார். மீனாவுடைய அப்பா மனச நான் மாத்துறேன் என்று கூறுகிறாள்.
உங்க அண்ணன் பண்ணத மறந்துருவேன் மன்னிச்சிருவேன்னு கனவுல கூட நினைக்காத என்று மனைவியை மிரட்டுகிறார் சித்துவின் பிசினஸ் மேன் மாமா. இதனால் அவரது மனைவியும் மகளும் மிரண்டு போய் நிற்கின்றனர். என்ன அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டவன். இவன் என்ன தைரியத்துல வீடேறி வந்திருக்கான். இவன் உனக்கு அண்ணனே இல்ல. அப்படி அண்ணன்தான் முக்கியம்னா இந்த வீட்ல உனக்கு இடம் இல்ல.
என்ன அவமானப்படுத்தி அசிங்கப்படுத்துனவனுக்கு என் வீட்ல இம்மி அளவு கூட இடம் இல்ல. டேய் உனக்கு மானம், சூடு, சொரணை எதுவும் இல்லயா என கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள நினைக்கிறார் மாமா. உடனே சுந்தரி குறுக்கிட்டு பேசுகிறார்.
என் பாட்டிய உள்ள வச்சி என்ன பாடு படுத்துனீங்க என்று கேட்கிறாள் சுந்தரி. அப்போது குறுக்கிட்டு பேசும் மீனாவின் அப்பா, ஏம்மா உனக்கு என்ன நடந்துதுனு தெரியாது தெரியாம பேசாது. நான் மட்டும் உன் பாட்டிய வீட்ட விட்டு வெளிய அனுப்பிருந்தா அந்த ரௌடி பய உன் பாட்டிய கொன்னே போட்ருப்பான். நான்தான் காப்பாத்துனேன். அவங்கள காப்பாத்ததான் அப்படி பண்ணேன் என்கிறார்.
உடனே சுந்தரி, இதுதான் சித்து அப்பாவும் செஞ்சார். அன்னைக்கு சிட் பண்ட்ல பணத்த போட்ட ஊர் மக்கள் கொதிச்செழுந்து ஆஃபீஸ அடிச்ச ஒடைக்குறப்ப அங்கிள் மட்டும் உங்கள அரெஸ்ட் பண்ணா இருந்திருந்தா உங்க உயிருக்கே உத்தரவாதம் இருந்துருக்காது என்று கூறுகிறாள். இப்ப சொல்லுங்க யார் மேல தப்பு என்று கூறுகிறாள். இப்போது மீனாவின் அம்மாவும் ஒரு உண்மையைக் கூறுகிறார்.
நீங்க கிட்னி பிரச்னையால உடம்புக்கு முடியாம இருந்தப்ப அண்ணி தான் கிட்னி டொனேட் பண்ணாங்க என்று கூறியதும் அப்படியே ஷாக் ஆகி விழுந்துவிடுகிறார் மீனாவின் அப்பா. இதனால் மனம் திருந்தியவர் அவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார்.
சுந்தரி நேற்று எபிசோட் | sundari serial yesterday episode youtube 13th May 2023
சித்துவின் அப்பா சுந்தரியிடம் தன்னுடைய மருமகளாக வருவியா என்று கேட்ட நிலையில், அதனை மறுத்துவிட்டார் சுந்தரி. இதற்காக சித்து மீதும் கோபத்தில் இருந்தார். ஆனால் தனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை இது என்னுடைய அப்பாவே கேட்டது என சித்து பேசி சமாளித்துவிட்டான். அடுத்து சுந்தரி சித்து வீட்டுக்கு வரும்போது அவன் அத்தை மற்றும் அத்தை மகள் இருவரையும் பார்த்து நலம் விசாரிக்கிறார்.
இதனிடையே இவர்களது குடும்பத்தை சேர்த்து வைக்க திட்டமிடுகிறார் சுந்தரி. சுந்தரியின் இந்த சவாலை கோவிலில் வைத்து பேசியதை கார்த்திக் பார்த்துவிடுகிறான். இதனை எப்படியும் முறியடிப்பேன் என்று தனக்கு தானே பேசிக்கொள்கிறான். அடுத்ததாக சுந்தரி மல்லிகாவை சித்துவுடன் அனுப்பி அவனது அத்தை வீட்டில் பேச வைக்கிறாள். அங்கு சித்து வருவதற்கு முன்னர் தாயும் மகளும் சீவி சிங்காரித்து புறப்படுகின்றனர். அதனை உணர்ந்த சித்துவின் மாமா யார் வரப் போகிறார்கள் என்று கேட்ட நிலையில் மல்லிகாவும் அவருடன் சித்துவும் வருகிறார்.
மாமா கோபத்தில் திட்டி சித்துவை அனுப்பி விடுகிறார். தனக்கும் உங்க அப்பனுக்கும் உள்ள பிரச்னை தீராதது என்று கூறுகிறார். இதனிடையே சித்துவின் அப்பாவிடம் வந்து கதையைக் கேட்கிறார்கள். சுந்தரி எப்படியாவது இவர்களைச் சேர்த்து வைப்பதாக கூறுகிறாள். சித்துவின் அப்பாவும் அவரது மாமாவும் பொண்ணு குடுத்து பொண்ணு எடுத்துக்கிட்டவங்க. சித்துவின் அப்பா போலிஸ் அதிகாரியாக இருக்கிறார். மாமா பிசினஸ் மேன். அவரும் அவருடைய நண்பரும் சேர்ந்து ஆரம்பித்த பிசினஸில் நஷ்டம் ஏற்பட, பிரச்னையாகி பொதுமக்கள் அடித்துக் கொல்ல நினைக்கும் ஆளாகி விடுகிறார் மாமா. இதனால் அவரைக் காப்பாற்றவும் தனது கடமையைச் செய்யவும் அவரை கைது செய்துவிடுகிறார் சித்துவின் அப்பா.
இதனால் தன் மானம் போனது என சித்துவின் அப்பாவை எதிரியாக பார்க்கிறார் சித்துவின் மாமா. இதனிடையே எப்படியாவது இந்த பிரச்னையை சமாளித்து இரு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க நினைக்கிறார் சுந்தரி.
சுந்தரி நாளைய எபிசோட் | sundari serial tomorrow episode youtube 16th May 2023
கார்த்தி, அனுவுக்கும் சுந்தரிக்கும் துரோகம் செய்ததை அறிந்த அனுவின் உயிர் தோழன் சிவா, கார்த்தியை தண்டிக்கப்போவதாக கூறுகிறார். இதனால் அடுத்து என்னென்ன நடக்கப்போகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu