Sundari serial கார்த்திக்கை தண்டிப்பேன்.. சூளுரைத்த சுந்தரி!
சுந்தரி இப்போது | Sundari Serial Today Episode 10th March 2023
சுந்தரி பூஜை செய்து அந்த பிரசாதத்தை வழங்கியதும் அனுவுக்கு அவள் மீது இருந்த கோபம் அனைத்தும் குறைந்துவிடுகிறது. இதனால் சுந்தரி வீட்டிலிருந்து அனு அவள் வீட்டுக்கு வரும் வழியிலேயே அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே வருகிறாள். அவள் தனக்காக பண்ணிய காரியங்கள் அனைத்தையும் நினைவுகூர்கிறாள். சுந்தரி தனக்காக எவ்ளோ நல்ல விசயங்களை பண்ணிருக்கால்ல மம்மி என அவள் அம்மாவிடமும் இதனை ஷேர் செய்கிறாள்.
அனுவின் மீதான சுந்தரியின் பாசம் அனுவுக்கு தெரியாமல் அவள் சுந்தரி மீது கடுமையான கோபத்தில் இருந்தாள். ஆனால் கோபப்பட வேண்டிய கார்த்திக்கை இவள் மிகவும் நம்புகிறாள். அனுவின் வயிற்றில் வளரும் குழந்தைக்காகத் தான் சுந்தரி இத்தனையையும் செய்திருக்கிறாள் ஆனால் அனு அதைப்பற்றி உணரவே இல்லையே என மனம் நொந்தவள் அவளது அம்மா. இப்போதுதான் சரியான சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. சுந்தரியைப் பற்றிய மேலும் சில நல்ல விசயங்களையும் அனுவிடம் கூறிவிடலாம் என யோசிக்கிறாள் அனு வின் அம்மா.
முன்னதாக தன் அம்மாவை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீட்டுக்கு வந்து மாற்று புடவையை எடுத்து வருவதாக கூறிவிட்டு வந்தாள் சுந்தரி. அவளுக்கு துணையாக சித்துவும் வருகிறான். வந்த இடத்தில் சுந்தரியின் வீட்டு ஓனர் அக்கா சுந்தரியை வெறுப்பேற்றுகிறாள். ஆனால் இதனால் மனம் நொந்து போகிறாள் சுந்தரி. சித்துவும் நீ ஏன் அனுவுக்கு இவ்ளோ சப்போர்ட் பண்ற என கேட்டு அவனும் கொஞ்சம் கோபப்படுகிறான். ஆனால் சுந்தரியோ இது கார்த்திக் செய்த பாவம் எனக்கு எந்த அளவுக்கு இதில் சம்பந்தம் இல்லையோ அதே அளவுக்கு அனுவும் அப்பாவி. அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று கூறுகிறாள். ஆனால் கார்த்திக்கை நானே தண்டிப்பேன் என்று வீராவேசமாக வசனம் பேசுகிறாள் சுந்தரி.
சுந்தரி இதுவரை | Sundari Serial yesterday Episode 9th March 2023
சுந்தரியின் அம்மா கார்த்திக் அப்பா வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து அங்கு கார்த்திக் வருகிறான். தனக்கு பொல்லாத நேரம் என்பதை அறியாத அவன், அங்கு வந்து மாட்டிக் கொள்கிறான். அங்கு சுந்தரியின் அம்மா அவனைக் கண்டதும் என் மகள் வாழ்க்கைய சீரழிச்சிட்டேயே என்று கோபத்துடன் சட்டையைப் பிடித்து கேட்கிறாள். உன் அப்பா சாகுறதுக்கும் நீதான் காரணமா என்று கோபத்தில் கத்துகிறாள்.
அனுவின் அம்மா சுந்தரிக்கு அவசர அவசரமாக போன் செய்கிறாள். ஏதோ ஒரு பதற்றம் அவள் முகத்தில் இருப்பது நமக்கு இந்த சூழ்நிலையின் கண்டிப்பான நிலைமையை நமக்கு உணர்த்துகிறது. அவள் தன் மகள் கோபத்தில் செல்வதைப் பற்றி யோசித்துவிட்டு உடனே சுந்தரிக்கு கால் செய்திருக்கிறாள்.
போனை எடுத்ததும் அங்கே அனு வந்திருக்கிறாளா என்று கேட்கிறாள். எப்படியும் அனுவுக்கு உண்மை தெரிந்து கார்த்திக்கை தேடித்தான் அங்கு சென்றிருப்பாள் என்பதை அவள் உணர்ந்து சுந்தரியிடம் கேட்க, அவளோ இங்கு வரவில்லை என்று கூறுகிறாள்.
வெளியில் சுந்தரியின் அம்மா கார்த்திக் சட்டையைப் பிடித்து கத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் வெளியே காரில் வந்து இறங்கி கேட்டைத் திறந்து உள்ளே வருகிறாள் அனு.
அனு முகத்தில் தீராத கோபம் அடுத்து என்ன நடக்கும் என்று நமக்குள் ஒரு எதிர்பார்ப்பு. அந்த வேளையில் அனுவுக்கு உண்மை தெரிந்துருக்கும்னு நினைக்கிறேன் என்கிறாள் அனுவின் அம்மா. சுந்தரி ஷாக் ஆகிறாள்.
திடீர் திருப்பமாக, அனு கார்த்திக் மீது கோபம் கொள்கிறாள். அவன் தன்னிடம் பொய் சொல்லிவிட்டு சென்றிருக்கிறான் அதற்கு அவசியம் என்ன? தந்தையின் இறுதி சடங்கு செய்ய செல்ல வேண்டியிருந்தால் என்னிடம் சொல்லிவிட்டே செல்லலாமே என பல சந்தேகங்களை அடுக்குகிறாள். ஆனால் கார்த்திக் இந்த சூழ்நிலையையும் சமாளிக்கிறான். தான் சுந்தரி அழைத்ததால் சென்றது உண்மைதான். அவள் நம் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என நேர்ந்து பிரசாதம் வாங்கி வைத்திருக்கிறாளாம். அதை வாங்கவே சென்றதாக கூறுகிறான்.
அனு உடனே வண்டியை எடுத்துட்டு வா போலாம் சுந்தரி வீட்டுக்கு என சொல்ல ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தாலும், அங்கு செல்கிறார்கள் இருவரும். அங்கே சுந்தரி நேர்ந்து பிரசாதம் கயிறு வழங்குகிறாள். இந்த முறையும் கார்த்திக்கை காப்பாற்றி விடுகிறாள் சுந்தரி. ஆனால் சுந்தரியின் அம்மா உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu