/* */

ஆறு கதாநாயகிகளுடன் 'காபி வித் காதல்' இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.

இயக்குநர் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் உருவாகியுள்ள, 'காபி வித் காதல்' டீசர் மற்றும் பாடல் வெளியானது.

HIGHLIGHTS

ஆறு கதாநாயகிகளுடன் காபி வித் காதல் இயக்கியிருக்கிறார் சுந்தர்.சி.
X

வழக்கமான தனது கலகலப்பான பாணியில் சுந்தர்.சி இயக்கியுள்ள படம், 'காபி வித் காதல்'. இப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ்.அருண்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவியதர்ஷினி, விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் அக்டோபர் 7-ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று(26/09/2022) சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய இயக்குநர்.சுந்தர்.சி., "மூன்று விதமான குணாதிசயங்களுடன் உள்ள மூன்று சகோதரர்கள், அவர்களுக்கு இடையே ஏற்படும் காதல் மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் ஆறு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

இதுவரை நான் பணியாற்றிய நடிகைகளிலேயே சவாலான நடிகை என்றால், அது சம்யுக்தாதான். இந்தப் படத்தில் அவர் கண்சிமிட்டாமல் நடிக்க வேண்டிய ஒரு காட்சியை படமாக்குவது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. அதேபோல, ரைசாவைப் பார்க்கும்போது, யாரிடமோ அட்ரஸ் கேட்டு வந்தவர்போல காட்சியளிப்பார். ஆனால், கேமரா முன் வந்துவிட்டால், அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.

அதேபோல், அம்ரிதா, மாளவிகா சர்மா, டிடி என எல்லோரும் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பித்துள்ளனர்'' என்றார்.

Updated On: 27 Sep 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்