'ரோஜா' சீரியல் நடிகை அக்ஷயாவுக்கு வளைகாப்பு - ஜொலிக்கும் பட்டு புடவையில் கணவருடன் ரொமான்ஸ்!

தனது கணவருடன், ‘ரோஜா’ சீரியல் நடிகை அக்ஷயா.
sun tv serial actress, akshaya serial actress bangle ceremony function- சன் டிவியின், ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று 'ரோஜா'. நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் சிபு சூர்யன் நடித்து வருகிறார், ஹீரோயினாக, 'ரோஜா' என்ற கேரக்டரில் நடிகை பிரியங்கா நல்கரி நடித்து வருகிறார்.எதிர்பாராமல் திருமணம் செய்து கொள்ளும் இந்த ஜோடிக்கு, இருவரும் உறவினர்கள் என தெரிய வருகிறது. பின்னர் ரோஜா தன்னுடைய சொந்த அத்தை மகள் என்பதை நிரூபிக்க போராடிய ஹீரோ... அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
ஏற்கனவே இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், முடிவே இல்லாமல்... அடுத்தடுத்த பிரச்சனைகளோடு தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே சிங்கிள் ஹீரோயினாக நடித்து வந்த ரோஜா தற்போது டபிள் ஆக்ட்டிங் கேரக்டராக மாறியுள்ளது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.
குறிப்பாக இதில் வரும் காட்சிகள் சில ட்ரோல் செய்யப்பட்டு வந்தாலும், யூகிக்க முடியாத அளவுக்கு காட்சிகளை வைத்து சம்பவம் செய்து வருகிறார் இயக்குனர்.
இந்த சீரியலில் அனு என்கிற வில்லி கதாபாத்திரத்தில் ஏற்கனவே நடித்து வந்தவர், ஷாமிலி. இவர் திருமணம் ஆகிய பின்னரும் தொடர்ந்து, இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில், திடீர் என கர்ப்பமாக ஆனதால், திடீர் என இந்த சீரியலை விட்டு விலகினார்.
இவரை தொடர்ந்து இந்த சீரியலில் நடிக்க கமிட் ஆனவர், விஜே அக்ஷயா. இவரும் திருமணம் செய்து கொண்ட பின்னரே இந்த சீரியலில் நடிக்க வந்தார். ஆரம்பத்தில் இவருக்கு வில்லத்தனம் சரியாக வரவில்லை என ரசிகர்கள் நினைத்த நிலையில்... போக போக வெறித்தனமான வில்லத்தனத்தை காட்ட துவங்கினார்.
தற்போது இவரும் கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருந்தாலும், தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த அக்ஷயா. தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளதால் சில நாட்களாக கதை, திசைமாறி சென்று கொண்டிருக்கிறது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதிகம் காட்டப்படுவது இல்லை.
இந்நிலையில் அக்ஷயாவுக்கு மிகவும் பிரமாண்டமாக கடந்த 8 ஆம் தேதி வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. அப்போது தன்னுடைய கணவருடன் அவர் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை இவர் வெளியிட, அவை வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பச்சை நிற பட்டுப் புடவையில்... அழகு தேவதையாக மின்னுகிறார் அக்ஷயா. எனினும் இவர் சீரியலை விட்டு விலகுவதாக எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில், குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் சீரியலில் நடிப்பாரா, இல்லையா, என்பது பின்னர்தான் தெரியவரும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu