லோகேஷுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் சன்பிக்சர்ஸ்..!

லோகேஷுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும் சன்பிக்சர்ஸ்..!
X
லோகேஷ் கனகராஜ் ஒரு பிரபல இயக்குநர் என்பதால் அவருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வசதியை செய்துகொடுத்திருப்பது இயல்பானதே

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் உருவாகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு தலைவர் 171 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்துள்ள நிலையில், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை சன்பிக்சர்ஸ் நிறுவனமும் லோகேஷ் கனகராஜும் ஆரம்பித்துவிட்டனர். லோகேஷ் கேட்கும் போதெல்லாம் கணக்கே இல்லாமல் அள்ளி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் தந்த மகிழ்ச்சி

அண்ணாத்த படத்தின் தோல்வியால் சற்று நிம்மதி இழந்த ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தின் மூலம் இந்தியா முழுக்க மிகப் பெரிய சாதனைகளைப் படைத்தார். அந்த வகையில் தமிழில் மிகப் பெரிய வசூல் அள்ளிய திரைப்படங்களில் ஒன்றாக இது பதிவானது. இதனையடுத்து ரஜினி நடிப்பில் லால் சலாம் திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்து த செ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

லியோ பிளாக்பஸ்டர்

வேற லெவலுக்கு எதிர்பார்ப்பில் உருவான லியோ படத்தின் வசூலும் மாஸ் காட்டியது. லலித் தனது திரைப்படத்தில் மிகப் பெரிய வசூலைப் பெறுகிறார். இது தயாரிப்பாளருக்கு பெரிய லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

முன்னதாக விக்ரம் படத்தின் வெற்றி ரஜினிகாந்த் - லோகேஷுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. விக்ரம் படத்துக்கு முன்பாகவே ரஜினியுடன் இணைந்து லோகேஷ் ஒரு படம் பண்ணிருக்க வேண்டும் அது கமல்ஹாசன் தயாரிப்பில் நிகழ்ந்திருக்க வேண்டும்.

கருத்துள்ள படம்

த செ ஞானவேல் இயக்கும் கருத்துள்ள படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தடுத்த கட்ட ஷெட்யூல்களுக்கு சென்னை திரும்பியது படக்குழு, தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதே படப்பிடிப்பு தளத்தில்தான் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதனால் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

அள்ளி கொடுக்கும் சன்

இந்தப் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு விக்ரம் படம் மூலம் மெகா ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துக்கு இதைவிட சிறப்பான படத்தை கொடுக்க முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நினைப்பில்தான் சன்பிக்சர்ஸ் நிறுவனமும் லோகேஷ் கேட்டதற்கு மேலாகவே கொடுத்து வருகின்றனர்.

இந்தப் படம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்துக்கு கதை எழுதுவதற்காக பெசண்ட் நகர் பீச்சில் ரூம் ஒன்றை போட்டுக்கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது. அந்த ரூமின் வாடகை கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

இந்தத் தகவல் திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் ஒரு பிரபல இயக்குநர் என்பதால் அவருக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வசதியை செய்துகொடுத்திருப்பது இயல்பானதே என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தத் தகவல் உண்மையா என்றால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷ் கனகராஜ் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!