இயக்குனர் ஷங்கருக்கு சம்மன்: 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

இயக்குனர் ஷங்கருக்கு சம்மன்: 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை
X

இயக்குனர் ஷங்கர் 

பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் அமலாக்கத்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் பல்வேறு பிரம்மாண்ட படங்களை தந்தவர், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் ஷங்கர். சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, புகார் எழுந்தது.

இதனிடையே, சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள், இயக்குனர் ஷங்கருக்கு 'சம்மன்' அனுப்பி இருந்தனர். இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஷங்கர் நேற்றிரவு ஆஜரானார்.

அமலாக்கத்துறை துணை இயக்குனர் மல்லிகா அர்ஜுனா, சுமார் 3 மணி நேரம் ஷங்கரை விசாரித்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு இயக்குனர் சங்கர் ஆஜரான தகவல் அறிந்த நிருபர்கள் அங்கு குழுமினர். இதையடுத்து, நிருபர்கள் சந்திப்பை தவிர்க்கும் பொருட்டு, வேறு வழியாக வாடகைக்காரில் இயக்குனர் ஷங்கர் புறப்பட்டு சென்றார்.

மீண்டும் இயக்குனர் ஷங்கரிடம் விசாரணை மேற்கொள்ள, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்