கோர்த்துவிட்ட ஞானவேல் ராஜா..! லாவகமா எஸ் ஆன சுதா!

அமீர் Vs ஞானவேல் ராஜா பிரச்னைதான் இப்போதைய டிரெண்ட். ஞானவேல் ராஜா பேட்டியைப் பார்த்த பலரும் இவர் அமீரை விமர்சிப்பது முறையல்ல என்று கடுமையாக சாடி வருகின்றனர். அமீருடன் பழகியவர்களும், பிரபலங்களும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து இது முறையல்ல என்பதை ஞானவேல் ராஜாவுக்கு தெரிவித்து வருகின்றனர். இதில் இடையில் மாட்டிக் கொண்டது என்னவோ சூர்யா குடும்பத்தினர்தான்.
நடிகர் சூர்யாவின் அப்பா சிவகுமாரோ, பருத்திவீரன் நாயகனான கார்த்தியோ இதுகுறித்து வாய்த்திறக்காமல் இருப்பது ரசிகர்கள் மேலும் அப்செட் ஆக்கியுள்ளது. இது அவர்களின் இமேஜிக்குதான் கெட்ட பெயரை உருவாக்கும் என்பது தெரிந்திருந்தும் அவர்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுதா கொங்கராவை போகிற போக்கில் மாட்டிவிட்டுள்ளார் ஞானவேல் ராஜா. அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் அமீரின் திறமையை கேலி செய்யும் வகையில் பேசினார். அதற்கு துணையாக சுதாகொங்கராவையும் அழைத்துக் கொண்டுள்ளார்.
அதே நேர்காணலில் பேசிய ஞானவேல் ராஜா, “மணிரத்தினத்திடம் உதவியாளராக இருந்த கார்த்தி, சுதா கொங்கரா, நான் 3 பேரும் அமீர் இயக்கிய 'ராம்' படத்தை பார்க்க சென்றோம். படத்தை பார்த்த சுதா படத்தின் மேக்கிங் சரியில்லை என்றார்” என்று கூறியிருந்தார்.
பிப்ரவரி 2, 2016, இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது... நான் பிரசாத் ஸ்டுடியோவிற்கு வெளியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன்... எனக்கு அது நன்றாக நியாபகம் இருக்கிறது, ஏன் என்றால், இறுதி சுற்று படத்திற்காக எனக்கு முதல் முதலாக திரையுலகில் இருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்... நான் ஒரே ஒரு விஷயம்தான் அவரிடம் சொன்னேன்... என் படத்தில் வந்த மதியின் கதாப்பாத்திரம் முத்தழகின் பாதிப்புதான் என்று. ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை... இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி...
இப்படி அவர் தனது டிவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை நோக்கி இன்னும் பல கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.
கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், நீங்கள் அமீரின் திறமை குறித்து கேலி செய்தீர்களா இல்லையா என்பதுதான். அதற்கு ஆம், என்றால் ஆம்.. அதை எதற்காக கூறினேன் என்று விளக்கம் தந்திருக்கலாம். இல்லை என்றால் என் மீது தவறான குற்றச்சாட்டை தயாரிப்பாளர் ஞானவேல் சொல்கிறார் என நேரடியாக பேசியிருக்கலாம். ஆனால் எதுவும் நேரடியாக பேசாமல், மறைமுகமாக அமீருக்கு ஆதரவு தெரிவித்தது போல பேசியிருப்பது ஏன் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.
அதே வேளையில், சூர்யாவின் நிலைப்பாடு குறித்து தெரியாத நிலையில், சுதா கொங்கரா அடுத்து சூர்யாவுடன் இணைந்து பணிபுரிய வேண்டும், தயாரிப்பாளர் ஞானவேலிடம் சேர்ந்து திரைப்படங்களில் வேலை செய்ய எதிர்காலத்தில் வாய்ப்பிருக்கிறது என்பதையெல்லாம் மனதில்கொண்டுதான் பக்குவமாக இந்த விசயத்தை அணுகியுள்ளார் எனவும் சிலர் அவரை பாராட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu