நடிகர் மாதவனுக்கு விருந்து அளித்த சுதா கொங்காரா

நடிகர் மாதவனுக்கு விருந்து அளித்த சுதா கொங்காரா
X

மாதவனுக்கு விருந்து பரிமாறும் சுதா கொங்காரா.

நடிகர் மாதவனுக்கு இயக்குநர் சுதா கொங்கரா விருந்து வைத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கடந்த 2016ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் ’இறுதிச்சுற்று’ வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் மூலம் பிரபல இயக்குநராக சுதா கொங்கரா எல்லோராலும் அறியப்பட்டார்.

இந்த நிலையில் ’இறுதிச்சுற்று’ படத்திற்கு முன்பே மாதவன் மற்றும் சுதா கொங்கரா ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆய்த எழுத்து’ என்ற படத்தில் மாதவன் நடித்திருந்த நிலையில் அந்த படத்தில் சுதா கொங்கரா உதவி இயக்குநராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் நீண்ட நாள் நண்பர் மாதவனுக்கு சுதா கொங்கரா தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார். மாதவனுக்கு விருந்து அளித்த புகைப்படத்தை சுதா கொங்கரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விருந்து குறித்து இயக்குநர் சுதா கொங்கரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கை அன்னம், பொடி சாம்பார், வத்த குழம்பு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை மாதவனுக்கு தான் பரிமாறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த விருந்துக்கு நன்றி கூறி நடிகர் மாதவன் ட்வீட் செய்துள்ளார். அதில், ’நீங்கள் ஒரு அசாத்தியமான இயக்குநர் மட்டுமல்ல பிரமாதமான சமையலாளர் என்பதையும் தெரிந்து கொண்டேன். உங்கள் கைகளால் உங்கள் இல்லத்தில் எனக்கு நீங்கள் பரிமாறுவது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த விருந்திற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story