சிம்புவை இயக்கப் போகிறார் சுதா கொங்கரா..?!

சிம்புவை இயக்கப் போகிறார் சுதா கொங்கரா..?!
X

நடிகர் சிலம்பரசன்.

தேசிய விருதுகளைக் குவித்த 'சூரரைப்போற்று' படத்தின் இயக்குநர் சுதாகொங்கரா தனது அடுத்த படத்தில் சிம்புவை இயக்கப் போகிறாராம்.

அண்மையில், அறிவிக்கப்பட்ட தேசிய விருதுப் பட்டியலில் ஐந்து தேசிய விருதுகளை வென்றெடுத்த 'சூரரைப்போற்று' படத்தின் இயக்குநரான சுதா கொங்கரா, தற்போது இந்தியில் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், 'கேஜிஎஃப்' படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது.

அப்படத்தில் நடிகர் சிம்புவை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது. 'சூரரைப்போற்று' இந்தி ரீமேக்கை முடித்தவுடன் சுதா கொங்கரா சிம்பு படத்தை இயக்கவுள்ளாராம்.

சிம்பு நடிப்பில் தற்போது 'மஹா' திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம், வரும் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய படங்களிலும் சிம்பு நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!