ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் பட ஃப்ர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

ஆர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'கேப்டன்' பட ஃப்ர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்1
'சார்பட்டா' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது 'கேப்டன்' படத்தில் ஆர்யா நடிச்சு வாறார். 'டெடி' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக சக்தி செளந்தரராஜன் ஆர்யாவை டைரக்ட் செய்யறார்.
மோலிவுட் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக வும். இவர்களுடன் கன்னட நடிகை காவ்யா ஷெட்டி, சிம்ரன், ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிச்சிருக்காய்ங்க. ஹை டெக்கான சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை தி ஷோ பீப்பிள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைஞ்சு தயாரிச்சு வருது.
டி இமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடையில் வெளியாகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu