ஜெயிலர் வில்லன் பத்தி திமிரு ஈஸ்வரி சொன்னது என்ன?

ஜெயிலர் வில்லன் பத்தி திமிரு ஈஸ்வரி சொன்னது என்ன?
X
ஜெயிலர் வில்லன் விநாயகன் குறித்து ஷ்ரியா ரெட்டி என்ன சொன்னார் தெரியுமா?

Jailer Villain Vinayakan Scene, Thimiru Eshwari Reacts, Jailer Movie Villain Vinayakan, Tamil News Today, Vinayakan Jailer Scenes, Vinayakan Jailer Interview, Jailer Scenes Theatre Responseஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்துள்ள விநாயகனை தமிழ் சினிமாவில் பார்த்த நினைவு இருக்கிறதா? திமிரு படத்தில் வருவாரே அவர்தானே என்று நீங்கள் நினைப்பது சரிதான். அவர்தான் திமிரு படத்தில் நடித்திருப்பார். திமிரு படத்தில் ஈஸ்வரியாக நடித்த ஷ்ரியா ரெட்டி ஜெயிலர் படத்தைப் பார்த்துவிட்டு படத்தையும் விநாயகனையும் பாராட்டியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் படம் ஜெயிலர். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இயக்கியுள்ள படம். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் மாஸாக என்ட்ரி கொடுத்து அசத்தியிருக்கிறார்கள் மோகன்லால், சிவராஜ்குமார் இருவரும். படம் தென்னிந்தியாவில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. காரணம் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோருக்கும் இந்த படத்தில் மாஸ் சீன் இருப்பதால் மலையாளம், கன்னட மொழி சினிமா ரசிகர்களும் இந்த படத்தைக் கொண்டாடுகின்றனர்.

இந்த படத்தில் தனது மிரட்டல் நடிப்பால் ரஜினிகாந்த் முன் நடித்து அசத்தியிருப்பார் விநாயகன். ரஜினிக்கு நிகராக அனைத்து சீன்களிலும் தெறிக்கவிடும் இவரது வசனங்களும் மலையாளம் கலந்து ஸ்லாங்கும் மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தமிழ் சினிமா இன்னொரு வில்லனைத் தேடி பிடித்திருக்கிறது. அவரின் வில்லத்தனத்தால் தியேட்டரில் ரசிகர்கள் மிரள்கின்றனர்.

விநாயகன் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். திமிரு, சிலம்பாட்டம், காளை, சிறுத்தை, மரியான் உள்ளிட்ட படங்களிலும் பிரமாதமான ரோலில் நடித்து அசத்தியிருந்தார். ஆனால் இதையெல்லாம் தாண்டி தமிழ் சினிமா வில்லன்கள் பட்டியலில் முன்னணி இடத்துக்கு வந்திருக்கிறார் விநாயகன். அடுத்தடுத்து அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தேடி வருகின்றனராம். விரைவில் பல படங்களில் அவரை வில்லனாக காணலாம் என்கிறார்கள்.

இந்நிலையில் அவரைப் பாராட்டியிருக்கிறார் திமிரு ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்த ஷ்ரியா ரெட்டி. அவர் விநாயகனை வெகுவாக பாராட்டியிருக்கிறார். யோ மேன் விநாயகா... நீங்கள் தெறியாக நடித்திருக்கிறீர்கள். ஏலேய் மாயி நீங்க ரொம்ப புத்திசாலித்தனமான நடிகர் என்பது தெரியும். உங்களுக்காக மிகவும் மகிழ்ச்சி என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!