ஸ்ரீதேவியின் மகள்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம்

பைல் படம்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாமர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவ்வப்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த இருதினங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரேயா திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் நேற்று இரவு திருப்பதி மலைக்கு நடந்து படியேறி வந்தனர். திருமலையில் இரவு தங்கிய அவர்கள் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டனர். சாமி தரிசனம் முடிந்த பின் ரங்கநாயக மண்டபத்தில தீர்த்த, பிரசாதங்களை அவர்கள் பெற்று கொண்டனர்.
ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆரின் 30-வது படத்தில் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதேபோல் குஷிகபூர் தமிழில் மெகா ஹிட் அடித்த லவ்டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu