/* */

தெற்கு நோக்கி வரும் ஸ்ரீதேவி மகள்: ஜூனியர் மயிலுக்கு ஆதரவு கிடைக்குமா?

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsதென்னிந்திய சினிமாவை நோக்கி ஸ்ரீதேவி மகள் ஜான்வி வருகிறார். ஜூனியர் மயிலுக்கு ஆதரவு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

தெற்கு நோக்கி வரும் ஸ்ரீதேவி மகள்: ஜூனியர் மயிலுக்கு ஆதரவு கிடைக்குமா?
X

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsமகள் ஜான்வியுடன் ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். ஜூனியர் மயில் என வர்ணிக்கப்படும் அவருக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவி.

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsகண்களால் பேசும் நடிப்பு, இயற்கை வனப்பு, கொஞ்சும் மொழி இவை அனைத்தும் ஒருங்கே பெற்றிருந்ததால் தமிழ் சினிமாவில் 1980- 85 காலகட்டங்களில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர் நடிகை ஸ்ரீதேவி. பாரதி ராஜாவின் 16 வயதினிலே படத்தில் மயிலு என்ற கதா பாத்திரத்தில் நடித்ததால் அவருக்கு இதுவே பட்டப்பெயராக மாறி போனது.

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsதமிழகத்தின் சிவகாசியை சேர்ந்த இவர் தனது திறமையான நடிப்பால் பின்னர் அகில இந்திய அளவில் நட்சத்திர பட்டாசாக ஜொலித்தார். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, குமரியாக, கதாநாயகியாக வலம் வந்த இவர் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழிப்படங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார்.

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsபின்னர் இந்திய சினிமாவின் உச்ச உயரமான பாலிவுட்டிற்கு சென்றார். ஸ்ரீதேவிக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் அதிகம் வந்தது. தமிழ் திரை உலகின் கனவு கன்னியாக வலம் வந்த மயிலு அகில இந்தியாவிலும் உள்ள அனைத்து ரசிகர்களையும் தனது கண்ணசைவால் தக்க வைத்துக் கொண்டார். பிரபல கபூர் குடும்பத்தின் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மர்மமான முறையில் இறந்தார். தமிழ் ரசிகர்களின் மத்தியில் மயிலாக வலம் வந்த ஸ்ரீதேவியின் மரணச் செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகத்தையே அதிர்ச்சி அடைய வைத்தது. ஸ்ரீதேவி மரணத்திற்கு முன்பாகவே அவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர் சில இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.


Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsஜான்வி சினிமாவுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்று ஆரம்பத்தில் பலரும் தங்கள் யூகத்தின் அடிப்படையில் பல செய்திகளை வெளியிட்டு வந்தனர். ஜான்விக்கும் சினிமாவில் ஆர்வம் இருந்த காரணத்தால் நடிக்க வந்தார். ஆனால் அவரது முதல் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஸ்ரீதேவி இறந்து விட்டார்.

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsஜான்வியின் முதல் படமான ‘தடக்’ எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. சுமாரான படமாகவே அமைந்தது. இருந்தாலும் அவரை முதல் படம் வெளியானதில் இருந்தே தென்னிந்திய படங்களில் நடிக்க வைக்க பெருமுயற்சிகள் நடைபெற்று வந்தது. ஆனால் அதற்கு அவர் அசைந்து கொடுக்கவில்லை பாலிவுட்டில் நிலையாக கால் ஊன்றி ஒரு சில வெற்றி படங்களை கொடுத்த பிறகு தென்னிந்திய சினிமா பற்றி யோசிக்கலாம் என்று அந்த கால கட்டங்களில் அவர் நினைத்திருக்கலாம்.


Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsஇருப்பினும் நாம் நினைத்தபடியே அனைத்தும் நடைபெற காலம் அவ்வளவு எளிதாக அனுமதிப்பதில்லை. குஞ்சன் சக்சேனா, ரூகி, குட் லக் ஜெர்ரி, மிலி என்று வரிசையாக படங்கள் நடித்தும் அவருக்கு எந்த படமும் சுமாரான வெற்றி என்ற நிலையை கூட கொடுக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். தற்போது பாலிவுட்டில் பவாய், மிஸ்டர் அண்ட் மிஸஸ் மகி ஆகிய இரண்டு படங்கள் கைவசம் வைத்திருந்தாலும் இன்னும் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க முடியாததால் அவருக்கு வரும் படங்களின் எண்ணிக்கையும் குறைந்து போய்விட்டது.

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsஇந்த நிலையில் தன்னுடைய தாயைப்போல தென்னிந்திய சினிமாவில் நுழைந்து மிகப்பெரிய வெற்றியை பெறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த ஜான்வி ஆர். ஆர்.ஆர். படத்தின் மூலமாக உலக அளவில் பிரபலம் அடைந்த ஜூனியர் என்.டி.ஆர். உடன் நடிக்க வாய்ப்பு வந்து கதவை தட்டி உள்ளது. பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் ஜான்வியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றும் நடக்காத நிலையில் தெலுங்கு சினிமாவில் எடுக்கப்பட்ட முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. ஆர்.ஆர்.ஆர். படம் ஜூனியர் என்.டி.ஆர் ன் 29 வது படமாகும். இதை அடுத்து தனது முப்பதாவது படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான கொரட்டால சிவாவுக்கு கொடுத்திருக்கிறார்.


Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsஇந்த இயக்குனருடன் இணைந்து இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டில் ஜனதா கேரேஜ் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை ஜூனியர் என்.டி.ஆர். கொடுத்திருந்தார். சுமார் ரூ. 40 கோடியில் எடுக்கப்பட்ட அந்த படம் ரூ. 140 கோடி வரை வசூலை கொட்டி கொடுத்தது. இதையடுத்து கொரட்டால சிவாவின் இயக்கத்தில் மீண்டும் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருப்பதால் அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsஅதோடு இந்த படத்தில் ஜான்வியும் இணைந்து இருப்பது தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக ஜான்விக்கு பெருந்தகை சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். பொதுவாக தெலுங்கு சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு அதிகபட்சமாக மூன்று கோடி ரூபாய் வரை தான் கொடுத்து வந்தார்கள். ஆனால் தற்போது ஆர். ஆர்.ஆர். படத்தின் மற்றொரு நாயகனான ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கும் ஆர்.சி 15 என்ற படத்தில் நாயகியாக நடிக்கும் கியாரா அத்வானிக்கு நான்கு கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிக் இருக்கும் ஜான்விக்கு ரூ. 5 கோடி சம்பளமாக கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Sridevi's Daughter Coming South, Jhonvi kapoor latest newsஎவ்வளவு தொகை கொடுத்து நடிக்க வைத்தால் என்ன? ஜூனியர் மயிலான ஜான்வியை தென்னிந்திய சினிமா கை தூக்கி விடுமா? அல்லது கைவிடுமா? தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆதரவு இவருக்கு கிடைக்குமா? என்பதை படம் வெளிவரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Updated On: 19 March 2023 11:48 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...