ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தனது ஒலி பயணத்தை தொடங்கிய சவுண்டபிள்

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி தனது ஒலி பயணத்தை தொடங்கிய சவுண்டபிள்: சென்னையின் அதி நவீன சவுண்ட் ஸ்டூடியோ
தரமான சவுண்ட் ஸ்டூடியோவுக்கான தேவை சென்னையில் இருப்பதை கருத்தில் கொண்டு, சவுண்டபிள் எனும் அதி நவீன ஒலியகத்தை வடபழனியில் தொடங்கி உள்ளார் இசை அமைப்பாளர் சக்தி பாலாஜி என்.
கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக செயல்பாட்டில் உள்ள போதும், கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையின் காரணமாக இன்று தனது பயணத்தை முறைப்படி சவுண்டபிள் தொடங்கியுள்ளது.
ஃபாரம் மாலுக்கு எதிரே ஆற்காடு சாலையில் ரத்னா ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கும் சவுண்டபிள், திரைத்துறை தொடர்புடைய அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது.
சவுண்டபிள் ஸ்டூடியோ குறித்து மனம் திறந்த சக்தி பாலாஜி, "மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருப்பது போன்ற தரமான ஒலியகங்கள் சில மட்டுமே சென்னையில் உள்ளன. மேலும், நான் ஒரு இசை அமைப்பாளராகவும் உள்ள காரணத்தால், ஒலி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஸ்டூடியோ ஒன்று நமது ஊரில் தேவை என்று தோன்றியதன் விளைவாக சவுண்டபிளை தொடங்கி உள்ளேன்," என்றார்.
மேலும் பேசிய அவர், "தற்போது டப்பிங் மற்றும் மிக்சிங் இரண்டு சூட்டுகள் சவுண்டபிளில் உள்ளன. திரைப்பட டப்பிங்கிற்கான ஸ்டீரியோ வசதியுடன் டப்பிங் சூட் உள்ள நிலையில், 7.1 வசதியுடன் மிக்சிங் சூட் உள்ளது. 10 படங்களுக்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில், ஸ்டூடியோவை பயன்படுத்தும் அனைவருமே பாராட்டு தெரிவித்து வருகின்றனர்."
"குறைந்த கட்டணத்தில், மிகச்சிறந்த சேவை மற்றும் வசதிகளை சவுண்டபிள் அளிக்கும். இங்குள்ள அமைதியான மற்றும் அழகான சூழ்நிலை படைப்புத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. வெப் சீரிஸ் எடுப்பவர்கள் டால்பி அட்மாஸ் வசதி கேட்பதால் டால்பி அட்மாஸ் வசதியையும், மற்றுமொரு சூட்டையும் விரைவில் சேர்க்கவுள்ளோம். ஒலி தொடர்பான அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் விதத்தில் சவுண்டபிள் செயல்படும்," என்று நிறைவு செய்தார் வெப் சீரிஸ் சிலவற்றுக்கும், திரைப்படங்களுக்கும் தற்போது இசை அமைத்து வரும் சக்தி பாலாஜி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu