இளையராஜாவை டென்சன் ஆக்கிய சூரியின் உறவினர்கள்!

இளையராஜாவை டென்சன் ஆக்கிய சூரியின் உறவினர்கள்!
X
சூரி விடுதலை படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் காத்திருந்தாராம். ஆரம்பத்தில் வடசென்னை படமெடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த கதையைச் சொல்லி, சூரிதான் ஹீரோ என்றிருக்கிறார் வெற்றிமாறன்.

விடுதலை பட விழாவில் ரசிகர்களின் கைத்தட்டல்கள் விசில்களால் இளையராஜா மனமகிழ்ந்து நெகிழ்ந்து பேசுவார் என்று எதிர்பார்த்தால் யாரையும் கைத்தட்டாதே விசில் அடிக்காதே கூச்சலிடாதே என்று திடீர் அதிர்ச்சியளித்தார். அதிலும் தான் இப்படி கூச்சலுக்கு மத்தியில் பேச விரும்பவில்லை என்பது மைக்கை கொடுத்துட்டு வெளியேறிவிடுவேன் என்று கூறினார். இதனால் அப்செட் ஆன படக்குழு, ரசிகர்களை சமாதானம் செய்து அவர் பேசும் வரை பொறுமையாக இருக்கும்படி சைகையில் பலரும் தெரிவித்தனர்.


இதில் முக்கியமான விசயம் ஒன்று தெரியவந்துள்ளது. ரசிகர்கள் அப்படி கூச்சலிட்டதுக்கு காரணம் சூரிதான் என்று குண்டைத் தூக்கி போடுகின்றனர் சிலர். அவர் பஸ் பிடித்து கூட்டி வந்த உறவினர்களும் நண்பர்களும்தான் இந்த பிரச்னைக்கு காரணம். அவர்கள்தான் சூரியைப் பற்றி யார் பேசினாலும் கத்தி கூப்பாடு போட்டார்கள். இதற்காகவே சூரி காசு குடுத்து ஆள் கூட்டி வந்திருக்கிறாரா என பலரும் பேசியது காதில் விழுந்தது.

தான் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் அதுவும் வெற்றி மாறன் மாதிரி மிகப்பெரிய இயக்குநர் அவரின் படத்தில் நடித்தது எவ்ளோ பெருமை அதை நம்ம ஊரு பங்காளிங்களுக்கும் காட்ட வேண்டும் என நினைத்த சூரி, ஊரிலிருந்து சொந்தபந்தங்கள் நட்பு வட்டாரங்களை 5 பேருந்துகளில் அழைத்து வந்திருக்கிறார். அவர்கள் சூரியின் உண்மை விசுவாசிகள் வேறு. வந்தவர்களுக்கு தடபுடல் விருந்தும் நடைபெற்றிருக்கிறது.


சூரி அழைத்து வந்தவர்களுடன் சேர்ந்து சில தனுஷ், வெற்றிமாறன், விஜய் சேதுபதி ரசிகர்களும் கூட்டத்தில் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதில் யார் கூச்சலிட்டது யாருடைய சத்தத்தால் இளையராஜா எரிச்சலடைந்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் வெகுஜனங்கள் இப்படி ஒரு இடத்தில் பிரபலத்தை பார்த்தால் அவர்களுக்கு தெரிந்தது கைத்தட்டல்களும் கூச்சலிடுவதும்தான். அதுதான் பிரபலங்களுக்கான பாராட்டு என இவர்கள் நம்புகிறார்கள்.

இந்நிலையில், அப்படி அழைத்து வந்தவர்களை இரவு அதே பேருந்துகளில் பத்திரமாக வழியனுப்பி வைத்தாராம் சூரி. விடிந்து பார்த்தால் சூரியும் மதுரையில் இருக்கிறார் என்கிறார்கள். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கிறார் என்கிற அறிவிப்பு நேற்று வந்தது. ஆனால் படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது நடந்து கொண்டிருப்பது கடைசி ஷெட்யூலாம்.


சூரி விடுதலை படத்துக்காக கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் காத்திருந்தாராம். ஆரம்பத்தில் வடசென்னை படமெடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த கதையைச் சொல்லி, சூரிதான் ஹீரோ என்றிருக்கிறார் வெற்றிமாறன். அதன்பின்னர் விஜய் படம் ஒன்று இருப்பதாக கூறி இந்த படத்தை தள்ளிப் போட்டிருக்கிறார். அதனையும் தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் அசுரன் படத்தை இயக்கவே மேலும் சில ஆண்டுகள் காத்திருந்திருக்கிறார் சூரி. அதன்பிறகு சூர்யாவுடன் வாடிவாசல் அறிவிப்பு வெளியாகவே கொஞ்சம் பதற்றத்தில்தான் இருந்ததாக கூறினார் சூரி. இப்போது படம் ரிலீசாக இருக்கிறது என்று தனது கதையைச் சுருக்கி கூறியிருந்தார் நடிகர் சூரி.

Tags

Next Story