விருதுகளைக் குவித்த சூரரைப்போற்று வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு..

விருதுகளைக் குவித்த சூரரைப்போற்று வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு..
X

சூரைரைப்போற்று படத்தின் போஸ்டர்.

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படம் வெளியாக இரண்டு ஆண்டுகள் நிறைவுப் பெற்றுள்ளதை படக்குழு நினைவு கூர்ந்துள்ளது.

நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் சூரரைப்போற்று. ஏர்டெக்கான் விமான போக்குவரத்து நிறுவனத்தை உருவாக்கிய கேப்டன் கோபிநாத் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இறுதிச் சுற்று படத்தை இயக்கி இருந்த சுதா கொங்காரா இயக்கி இருந்தார்.

நடிகர் சூர்யா-ஜோதிகா ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இசையப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தன. நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகியது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் உலகம் முழுவதும் சூரரைப்போற்று படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையெடுத்து, உதான் என்ற பெயரில் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

உலக அளவில் மூன்றாவது சிறந்த படம் என்ற ஐஎம்டி ரேங்கை சூரரைப்போற்று படம் பெற்றுள்ளது. மேலும், 78 ஆவது கோல்டன் குளோப் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு படம் என்ற பிரிவில் திரையிடப்பட்ட 10 படங்களில் சூரரைப்போற்று படமும் ஒன்றாகும். மேலும், உலகம் முழுவதும் வழங்கப்படும் விருதுகளில் பல விருதுகளை சூரரைப்போற்று படம் பெற்றது.

மேலும், 2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் சூர்யாவுக்கு இந்தப் படத்தில் நடித்ததற்காக வழங்கப்பட்டது. சிறந்த பியூச்சர் படம் என்ற பிரிவில் சூரரைப்போற்று படத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் நாயகி அபர்னா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தின் இயக்குநர் சுதா கொங்காராவுக்கு சிறந்த திரைக்கதைக்கான தேசி விருது வழங்கப்பட்டது.

திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்பதை சூரரைப்போற்று திரைப்படம் நிரூபித்தது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் சூர்யாவுக்கு முக்கிய பிரமுகர்களும், மூத்த நடிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர். சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநர் சுதா கொங்காரா, நடிகர் சூர்யா, நடிகை அபர்னா பாலமுரளி உளிட்ட படத்திற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் படத்தின் நினைவுகளை பகிர்ந்து உள்ளனர்.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற சூறாவளி காற்றாய் சுழன்று சுழன்று ஆடு என்ற பாடலையும், சில காட்சிகளையும் பதிவிட்டு உள்ளது. இதேபோல, நடிகை அபர்னா பாலமுரளி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரரைப்போற்று படத்தின் டிரைலரை பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!