விரைவில் 'டும் டும்' நடக்கிறது; கவுதம் கார்த்திக் கரம் பிடிக்க போவது யாரை?
![விரைவில் டும் டும் நடக்கிறது; கவுதம் கார்த்திக் கரம் பிடிக்க போவது யாரை? விரைவில் டும் டும் நடக்கிறது; கவுதம் கார்த்திக் கரம் பிடிக்க போவது யாரை?](https://www.nativenews.in/h-upload/2022/08/19/1579379-610626.webp)
gautham karthick marriage update-நடிகர் கவுதம் கார்த்திக்
Actor Gautham Karthik-தமிழ் சினிமாவில், இளம் நடிகர்களில் ஒருவரான கவுதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்; நடிகை மஞ்சிமா மோகனை அவர் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் வதந்திகள் பரவின. இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்க இருப்பது உண்மைதான் என, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 'நவரச நாயகன்' என்று அழைக்கப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய 'கடல்' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு 'வை ராஜா வை' 'இவன் தந்திரன்' 'தேவராட்டம்' உள்பட பல படங்களில் நடித்த கவுதம் கார்த்திக், தற்போது சிம்புவுடன் 'பத்து தல' மற்றும் '1947' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டுக்குள் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக்- நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் வதந்திகள் வெளியான நிலையில், இந்த தகவலை இருவருமே மறுத்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் கவுதம் கார்த்திக் இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெற உள்ளது; இது குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் அந்த பேட்டியில் அவர் மணமகள் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் அவர் யாரை திருமணம் செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu