சிவகார்த்திகேயன் படத்தால் சிக்கலில் கமல்ஹாசன்..!

சிவகார்த்திகேயன் படத்தால் சிக்கலில் கமல்ஹாசன்..!
X
2000 கோடி ரூபாயை சினிமாவில் முதலீடு செய்ய வந்த நிறுவனமான சோனி பிக்சர்ஸ், தற்போது பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசனின் விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், அவரது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக பல படங்களைத் தயாரிக்க முன்வந்தார். அதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக இருந்த சோனி நிறுவனமும் இணைந்து கிட்டத்தட்ட 2000 கோடிகளை சினிமாவில் இறக்க முடிவு செய்திருந்ததாக தகவல் வெளியானது.

அதில் முதற்கட்டமாக கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும் சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய கதை ஒன்றை படமாக எடுக்க முடிவு செய்தனர். சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து இந்த படத்தை கடந்த ஆண்டு துவங்கினர்.

கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே21 படப்பிடிப்பு 90 நாட்களை கடந்தும் முடிவடையாததால், படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமாகிவிட்டது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதனால், படத்தை தயாரிக்கும் சோனி நிறுவனம் கடுப்பாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சொன்ன பட்ஜெட்டுக்கு அதிகமாக கொடுக்க 1 சதவிகிதம் கூட சம்மதிக்க மாட்டார்கள். இதனால் படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இருவரும் படத்தின் பட்ஜெட்டை அதிகரித்துள்ள நிலையில் கடுப்பாகி இந்த படத்துடன் கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாம்.

இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படாத நிலையில், பட்ஜெட் 200 கோடி ரூபாய்க்கு மேல் தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சோனி நிறுவனம் கமல்ஹாசனிடம் கேட்டபோது, படத்தை முடிக்க குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் தேவை என்று கமல் கூறியுள்ளார்.

இதனையடுத்து, படத்தை முடிக்க மேலும் 100 கோடி ரூபாய் செலுத்த சோனி நிறுவனம் தயாராக இல்லை என்று கூறியுள்ளது. மேலும், இந்த படம்தான் கடைசி ப்ராஜெக்ட் என்று கமலிடம் சோனி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த செய்தி கமல்ஹாசனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோனி நிறுவனத்துடன் இணைந்து 2000 கோடிக்கு அடுத்தடுத்து பல படங்களை தயாரிக்க கமல் திட்டமிட்டிருந்தார். ஆனால், எஸ்கே21 படம் தோல்வியடையும் பட்சத்தில், இந்த திட்டம் முழுவதும் தடைபடும்.

எஸ்கே21 படத்தின் தோல்வியால், கமல்ஹாசனின் ஹீரோ இமேஜும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இந்த படம் தோல்வியடையாமல், கமல்ஹாசன் மீண்டும் மக்கள் மத்தியில் மெருகேற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படம் வருகிற 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ், சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர் மகேந்திரன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

Tags

Next Story
சும்மா விராட் கோலி மாதிரி ஃபிட்டான வாழ்க்கை வாழணுமா? இதான் டிரிக்ஸ்..!