சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்
X

பைல் படம்.

‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தளபதி திரைப்படத்தில் ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைல் போல சிவகார்த்திகேயன் சிகையலங்காரம் இருந்ததால், அவரது ரசிகர்கள் குஷியாகினர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் ’சீன் ஆ சீன் ஆ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மாவீரன் படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர். அதன்படி ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ஈரோட்டில் தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் தெரியுமா?