விஜய் இல்ல... SK தான் ஒன் ஒன் ஒன் நம்பர் 1.. இதான் கணக்கு!

விஜய் இல்ல... SK தான் ஒன் ஒன் ஒன் நம்பர் 1.. இதான் கணக்கு!
X
விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறி அதிக அளவில் இருப்பதால் விரைவில் சிவகார்த்திகேயன் அவரை சினிமாவில் ஓவர்டேக் செய்துவிடுவார் என கணிக்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் போற ஸ்பீடுக்கு விஜய்ய ஓவர் டேக் பண்ணி நம்பர் 1 இடத்த புடிச்சிடுவாரு போல...

இத நான் சொல்லலிங்க.. தமிழ் சினிமா நடிகர்களோட வளர்ச்சிய பத்தி கணிக்குற சினிமா டிராக்கர்கள்தான் இத பத்தி பேசிட்டு இருக்காங்க. ஆமா.. உண்மையிலேயே சிவகார்த்திகேயன் விஜய்ய ஓவர்டேக் பண்ணிடுவாரா? எந்த வருசம் அது நடக்கும்... அத தெரிஞ்சிக்கணும்னா இந்த பதிவ முழுசா படிக்கணும்.


தமிழ் சினிமாவுல எம்ஜிஆர் காலம்னு ஒன்னு இருந்துச்சு. சிவாஜி என்னதான் கஷ்டப்பட்டு வேடங்கள் போட்டு நடித்து அசத்திட்ருந்தாலும், எம்ஜிஆரின் ஆட்காட்டி விரல் அசைவுக்கு தமிழகமே அசஞ்சிது. அதுமாதிரிதான் உலக அளவுல பல டெக்னாலஜிகள இந்தியாவுக்கு கொண்டு வந்து கஷ்டப்பட்டு மேக்கப் போட்டு பல நல்ல படங்கள கொடுத்திருந்தாலும் கமல்ஹாசன விட ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் குவிஞ்சாங்க.

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத வசூல் சக்ரவர்த்தியா மாறுனாரு ரஜினி. அப்படியே தன்னோட சாம்ராஜ்யத்தையும் அமச்சிக்கிட்டாரு. அவருக்கு பிறகு நிறைய பேரு அந்த இடத்த அடைய ஆசப்பட்டாலும் யாராலையும் முடியல. விஜய் அந்த இடத்த புடிக்க நினச்சாரு..

கங்கா சந்திரமுகியா தன்ன நினச்சிக்கிட்டா.. சந்திரமுகியா நின்னா சந்திரமுகியாவே மாறிட்டாங்குறமாதிரி ரஜினி இடத்துக்கு ஆசப்பட்ட விஜய், இப்ப கிட்டத்தட்ட அந்த இடத்த நெருங்கிட்டாரு. ரஜினிய விட பல மடங்கு அதிக சம்பளமும் வாங்கிட்டு இருக்காரு. ஆனா விஜய் வளரும்போதே அவரு கூட சேர்ந்தே இன்னொருத்தரும் வளர்ந்துட்டு இருக்காரு. அவரு வேற யாரும் இல்ல நம்ம சிவகார்த்திகேயன்தான்.


அவரு நடிப்புல மாவீரன் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகுது. படத்து மேல நிறைய எதிர்பார்ப்பு இருக்கு. ஏற்கனவே மண்டேலா படத்துக்காக தேசிய விருது வாங்கு டெரக்டர்னால இந்த படம் வேற லெவலுக்கு இருக்கும்னு எல்லாரும் பேசிக்கிறாங்க. டிரைலரும் எல்லாருக்கும் பிடிச்சமாதிரி கட் பண்ணிருந்தாங்க. கண்டிப்பா நல்ல ஓபனிங் இருக்கும்னு சொல்லிக்கிறாங்க.

ஏற்கனவே ராம்குமார் இயக்கத்துல அயலான் படத்தையும் வர்ர தீபாவளிக்கு வெளியிடுறதா அறிவிச்சிருக்காங்க.

இந்த படத்துக்கு அப்றம் கமல்ஹாசன் தயாரிப்புல ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்துல ஒரு படம். அதுவும் கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம்தான். அடுத்து ஏ ஆர் முருகதாஸ் கூட ஒரு படம்னு இவரோட சினிமா கிராஃப் மேல நோக்கி போயிட்டு இருக்கு.


எல்லாம் சரிதான்பா.. ஆனா விஜய்ய ஓவர்டேக் பண்ணிடுவாரானு நீங்க கேட்குறது புரியுது. விஜய் அடுத்த வருசம் வர்ற தேர்தலுக்குள்ள கட்சி ஆரம்பிச்சி 2026 தேர்தல்ல போட்டி போட நினைக்குறார்னு ஒரு தகவல் வந்துட்டு இருக்கு. ஒருவேள அதுல முழு கவனத்தையும் செலுத்துனார்னா சினிமா மேல கொஞ்சம் கவனம் சிதறுனாலும் சிவகார்த்திகேயன் அந்த இடத்த புடிச்சிடுவாருன்னு சொல்றாங்க கோலிவுட் இண்டஸ்ட்ரில.

இன்னைக்கு தேதிக்கு சிவகார்த்திகேயனோட வேல்யூ 30 கோடி, வருசத்துக்கு ரெண்டு படம்னு பாத்தா 60 கோடி. இந்த ஸ்பீட்ல போனா நிச்சயமா இன்னும் 3,4 வருசத்துக்குள்ள விஜய்ய விட அதிகமா சம்பளம் கேட்குறதுக்கும் வாய்ப்பிருக்கு.

Tags

Next Story
ai in future agriculture