ராணுவ வீரராக பயிற்சி! தடம் மாறும் சிவகார்த்திகேயன்!

ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயன் உண்மையிலேயே ராணுவத்தில் சேர எப்படி பயிற்சி எடுக்கிறார்களோ அப்படியே எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹீரோவாக இல்லாமல் ஆக்டராக ஆக முயற்சிக்கும் தடத்துக்கு மாறியிருக்கிறார் என பலரும் அவரைப் பாராட்டு கின்றனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ராணுவ வீரராக பயிற்சி! தடம் மாறும் சிவகார்த்திகேயன்!
X

கமல்ஹாசன் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே புகழும் ஓர் உன்னத நடிகர். உலகின் பல நாடுகளிலும் உள்ள முன்னணி கலைஞர்கள் கூட இந்திய சினிமா என்றவுடன் கமல்ஹாசனை தங்கள் ஃபேவரைட் ஆக்டராக கூறுகிறார்கள்.

விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை இந்த காட்டுக்கு நான் ராஜா என்று உரக்க சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் விக்ரம் படத்தின் மூலம் மிகப் பெரிய பெயரைப் பெற்றிருக்கிறார். இந்நிலையில் அடுத்தடுத்து பல படங்களைத் தயாரிக்கவும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படம் கமல்ஹாசன் தயாரிப்பிலேயே உருவாகிறது. இந்த படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் நடக்க இருப்பதாகவும், இதற்காக சிவகார்த்திகேயன் ராணுவ பயிற்சி எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனுஷ் உள்ளிட்டோரின் உதவியால் சினிமாவில் அறிமுகமாக தனது அயராத உழைப்பால் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவரின் படங்கள் ரஜினி, விஜய் படங்களுக்கு அடுத்தபடியாக எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெறுகின்றன.

கமெர்ஷியல் ஃபார்முலாவை வைத்து பல வெற்றிகளைப் பெற்ற சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தைத் தவிர தனது அனைத்து படங்களிலும் வழக்கமான டெம்ப்ளேட் ஆக்டிங்கையே தந்திருப்பார். வழக்கமான காமெடிகள், வழக்கமான காதல் காட்சிகள் என சிவகார்த்திகேயனிடம் புதிதாக எதிர்பார்க்க என்ன இருக்கிறது என்பதை மாற்றும் விதமாக அமைய இருக்கிறது ராஜ்குமார் பெரியசாமியின் படம்.

மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறாராம். மேலும் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக மிகவும் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியிருக்கிறார். இது மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் எனவும், படத்தில் கற்பனை பாடல்கள் எதுவும் இருக்காது அனைத்தும் இயல்பாக கதையோடு பொருந்திய பாடல்கள்தான் என்கிறார்கள். மேலும் இதில் மிக வலிமையான கதை ஒன்றை சொல்ல இருப்பதாகவும், ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயன் உண்மையிலேயே ராணுவத்தில் சேர எப்படி பயிற்சி எடுக்கிறார்களோ அப்படியே எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஹீரோவாக இல்லாமல் ஆக்டராக ஆக முயற்சிக்கும் தடத்துக்கு மாறியிருக்கிறார் என பலரும் அவரைப் பாராட்டு கின்றனர்.

Updated On: 4 April 2023 9:30 AM GMT

Related News