குழந்தைகள்தான் டார்கெட்டாம்! சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் முந்துகிறதா?

குழந்தைகள்தான் டார்கெட்டாம்! சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் முந்துகிறதா?
X
முதன்முதலில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்துமுடிந்திருந்தால் படத்தை மே மாத துவக்கத்தில் ரிலீஸ் செய்து குழந்தைகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று வருத்தப்படுகின்றனராம்.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் குழந்தைகள் வெகுவாக ரசிக்கும் பல விசயங்கள் இருக்கிறதாம். இதனால் கோடை விடுமுறைக்கே படத்தை திரைக்கு கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுதான் படத்தை துவங்கியிருக்கிறார்கள். ஆனால் நடந்தது வேறு கதையாகிவிட்டது. இப்போது ஜூன் மாதம் ரிலீஸ் செய்வதை முன்கூட்டியே செய்ய முயற்சி செய்தால் என்ன என்று தயாரிப்பு தரப்பிடமும் சிவகார்த்திகேயன் ஆலோசனை செய்து வருகிறாராம்.

மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் படப்பிடிப்பை விரைவாக நடத்தி முடித்து தயாரிப்பாளருக்கு சேமித்து கொடுப்பார் என்றுதான் படம் ஆரம்பிக்கும்போது சொன்னார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் - மடோன் அஸ்வின் உடனான பிரச்னை காரணமாக படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்போது பிரச்னை ஒருவழியாக சரிகட்டப்பட்டு இன்று சிவகார்த்திகேயன் நடிக்கும் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அநேகமாக இனி பேட்ச் ஒர்க் எதுவும் இருந்தால் மட்டுமே சிவகார்த்திகேயனை அழைப்பார்கள். கிட்டத்தட்ட படமே முடிந்த கதைதான். இருந்தாலும் வரும் திங்கள்கிழமை இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.


இடையில் மடோன் அஸ்வின்- சிவகார்த்திகேயன் பிரச்னை ஏற்பட சில நாட்கள் ஷூட்டிங் போகாமல் தடைபட்டது. இதனால் மாவீரன் படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்துள்ளது படக்குழு. சோலாவாக வந்தால் ராஜாவாக இருக்கலாம் என்று கணக்கு போட்ட சிவகார்த்திகேயனுக்கு குறுக்கே இந்த கௌசிக் வந்தா என கார்த்தியின் திரைப்படம் வந்து நுழைந்திருக்கிறது.

முன்னதாக வெளியான பிரின்ஸ் படம் சரியாக போகாத நிலையில் இந்த படத்தை எப்படியும் வெற்றியடையச் செய்ய எல்லா வழிகளையும் முயன்று வருகிறார் சிவகார்த்திகேயன். இப்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் லிப் சிங் காட்சிகள் மட்டுமே தெலுங்கில் எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சரிதா இந்த படத்தில் நடிக்கிறார்.


வருகிற ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வேறெந்த படமும் ரிலீசாகாது நாம் சோலோவாக வந்து கல்லா கட்டலாம் என நினைத்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கேட்டதும் சிவகார்த்திகேயன் கொஞ்சம் அப்செட்டாம். ஏற்கனவே இவருடன் மோதி ஹீரோ, பிரின்ஸ் ஆகிய படங்கள் படுதோல்வியைச் சந்தித்தன. இப்போது மூன்றாவது முறையாக தோல்வியடைந்தால், மானம் போய்விடும் என வருத்துப்படுகிறாராம்.

இதனால் படத்தை இரண்டு வாரங்கள் வரை முன்னரே ரிலீஸ் செய்தால் என்ன என்று திட்டமிட்டு வருகிறார்களாம். முதன்முதலில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்துமுடிந்திருந்தால் படத்தை மே மாத துவக்கத்தில் ரிலீஸ் செய்து குழந்தைகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று வருத்தப்படுகின்றனராம். இருந்தாலும் கூடிய வரைக்கும் சீக்கிரமே வெளியிடவேண்டும், போட்டிக்கு யாரும் இருக்க கூடாது என்று தேதி பார்த்து வருகிறார்களாம் படக்குழுவினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!