சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் புதிய படம்?

பைல் படம்.
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் படம் வாரிசு. இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து இருந்தார். இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனும், முருகதாஸும் இணையும் இந்தப்படம் ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற உள்ளதாகவும், முறையான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கமர்ஷியல் கதையை சொன்னதாகவும் அந்தக் கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போனதாகவும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சொன்ன கதை தான் சிவகார்த்திகேயனுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu