சிவகார்த்திகேயன் ஜோடியாக இவரா? அசத்தல் போங்க!

சிவகார்த்திகேயன் ஜோடியாக இவரா? அசத்தல் போங்க!
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரபல ஹிந்தி நடிகை நடிக்க இருக்கிறாராம்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் விரைவில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாகூர் Sivakarthikeyan Mrunal Thakur நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் SK21 படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடிந்ததும் பட அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராணுவ வீரர் கதையை அடிப்படையாகக் கொண்ட SK21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். காஷ்மீரில் இந்த படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாவீரன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் மிஷ்கின், அதிதி ஷங்கர், சரிதா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் குரல் இந்த படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கடைசி படம் பிரின்ஸ். இந்த படம் படு தோல்வியடைந்தது. இதனால் சிவகார்த்திகேயன் கடுமையான மன உளைச்சலில் இருந்தார். ஆனால் அவருக்கு நல்ல விசயமாக மாவீரன் படம் வெற்றி பெற்றது. இதனால், சிவகார்த்திகேயன் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார். இந்த படத்தின் மூலம் கொஞ்சம் கடனை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 3,4 படங்கள் தொடர் வெற்றி பெற்றால் சிவகார்த்திகேயன் தனது கடன்களையெல்லாம் அடைத்து பெரிய இடத்துக்கு வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் ஒவ்வொரு அடியையும் பார்த்து நிதானமாக எடுத்து வைக்கிறார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக இவரும் ஏ ஆர் முருகதாஸும் இணைகிறார்கள் என்று தகவல் வெளியானது.

தற்போது, இது உண்மையாகவே நடக்கும் போலத் தெரிகிறது. சிவகார்த்திகேயன் - ஏ ஆர் முருகதாஸ் இணைந்துள்ள புதிய படம் SK22 வில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாகூர் Sivakarthikeyan Mrunal Thakur நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருவரது கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story