சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹெச் வினோத்..! ஆனால் இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்கா?

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹெச் வினோத்..! ஆனால் இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்கா?
X
இப்படி இருக்க அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படமும் வர இருக்கிறது. ஆனால் ஒரு கண்டிசனும் போட்டிருக்கிறார் வினோத்.

விஜய்யின் அடுத்த படத்தை ஹெச் வினோத் இயக்க இருப்பதாக தமிழ் சினிமாவில் பேச்சு எழுந்துள்ள நிலையில் அதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. இந்நிலையில் இந்த படம் டிராப் என்று ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் பல முன்னணி நடிகர்களும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தைத் தொடர்ந்து அவர் தனது கடைசி படமாக தளபதி 69 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்க அவர் ஹெச் வினோத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஹெச் வினோத்திடம் கதை கேட்டிருந்த விஜய் அவரது கதை தான் கடைசி படமாக செய்யும்பட்சத்தில் தனது அரசியல் பயணத்துக்கு ஊக்கியாக அது அமையும் என அவர் நினைக்கிறார் என்கிறார்கள். இதனால் ஹெச் வினோத்தின் கதையில் விஜய் அடுத்து நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்நிலையில், ஹெச் வினோத் - விஜய் படம் நடக்கப்போவது இல்லை. விஜய் தற்போது அரசியலில் படுபிஸியாக களமிறங்கிவிட்டார். இனி அடுத்தடுத்து நடக்கும் விசயங்கள் எல்லாமே அரசியலுக்காகவே இருக்கும். இதனால் கடைசி படத்தை கைவிடும் முடிவை எடுத்துள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

ஹெச் வினோத் - தனுஷ்

இந்த படம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஹெச் வினோத்துடன் அடுத்து இணையும் நடிகர் தனுஷ்தானாம். நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் திரைப்படமான குபேராவில் நடித்து வருகிறார். இதனிடையே தனது இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ராயன் படத்தின் ரிலீஸ் வேலைகளையும் பார்த்து வருகிறார். இதற்கிடையில் இன்னொரு தெலுங்கு படம், ஒரு ஹிந்தி படம் என அடுத்தடுத்து லைன் அப்களை வலுவாக வைத்திருக்கிறார். அதற்கு முன்னதாக தமிழில் ஹெச் வினோத்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச் வினோத் - பேஸன் ஸ்டூடியோ சுதன் - சிவகார்த்திகேயன்

இப்படி விஜய், தனுஷ் படங்கள் கைவசம் இருக்க கார்த்தியுடன் தீரன் அதிகாரம் இரண்டு படமும் வரும் என்று பேச்சு எழுந்துள்ளது. இப்படி இருக்க அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படமும் வர இருக்கிறது. ஆனால் ஒரு கண்டிசனும் போட்டிருக்கிறார் வினோத்.

விஜய் படம் - தனுஷ் படம் - அப்றம்தான் சிவகார்த்திகேயன் படம் என அவர் ஒப்பந்தம் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இடையில் அஜித்குமார் வந்தால் விஜய் படத்தை முடித்துக் கொண்டு பின் தனுஷ் படம், அந்த படத்துக்கு பிறகு அஜித்துடன் புதிய படம், அதனைத் தொடர்ந்துதான் சிவகார்த்திகேயன் படம் என ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருக்கிறதாம்.

சிவகார்த்திகேயனுக்கும் அடுத்தடுத்து பல லைன்அப்கள் இருக்கின்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு டான் சிபி சக்ரவர்த்தியிடம் கதை கேட்டு வைத்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

இப்படி சிவகார்த்திகேயன் சிறப்பான அடி எடுத்து வைக்கிறார். அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களுடனும் வெற்றி பெற்ற இயக்குநர்களுடனும் கைக் கோர்த்து தனது கதாநாயக பிம்பத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!