பயத்தில் தப்பித்த சிவகார்த்திகேயன்... சிக்கிய சசிகுமார்

பயத்தில் தப்பித்த சிவகார்த்திகேயன்... சிக்கிய சசிகுமார்
X

நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan Latest News - கதையை கேட்டவுடன் தோல்வி பயத்தால் வேண்டாம் என சிவகார்த்திகேயன் ஒதுங்கியதால் அதில் சசிகுமார் சிக்கியுள்ளார்.

Sivakarthikeyan Latest News -நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் பணியாற்றினார். திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலை கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் படிப்பை படிப்பை முடித்தார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.

பின்னர் தனுஷ் நடித்து வெளியான 3 திரைப்படத்தில் அவரது நண்பராக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இதனைத்தொடர்ந்து தனுஷின் தயாரிப்பில் 'எதிர்நீச்சல் படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகார்த்திகேயன் அத்திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது எனக் கூறலாம்.

அதன் தொடர்ச்சியாக 'மான் கராத்தே' உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த சிவகார்த்திகேயன், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகராக உருவெடுத்தார் எனவும் கூறலாம். இந்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் மற்றொரு படமான ரஜினிமுருகன் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்த நிலையில் அந்த படமும் மிகப்பெரிய சூப்பர் ஹிட்டை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.

பொன்ராம் இயக்கத்தில் 3 முறையாக சமந்தா, சிம்ரன், சூரி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு தோல்வியைத் தழுவிக் கொடுத்தது. இந்த தோல்வியை சரிகட்ட பொன்ராமை தவிர்த்து வேறு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

Latest Sivakarthikeyan Tamil News Updates

இந்த நிலையில், இயக்குனர் பொன்ராம் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து திரைப்படம் இயக்கலாம் என யோசனையில் இருந்து வந்தார். கதையை கேட்ட சிவகார்த்திகேயன் உஷாராகி அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என தெரிவித்தாராம்.

அந்த சமயத்தில் தான் பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ், சசிகுமார் காம்போவில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் முதன்முதலில் இத்திரைப்படத்தின் கதையை சிவகார்த்திகேயனிடம் தான் பொன்ராம் கூறினாராம்.

அதன் பின்னரே நடிகர் சசிகுமார் தனது கடனை அடைப்பதற்காக இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களின் தோல்வியால் இயக்குனர் பொன்ராம் தமிழில் படங்களை இயக்குவதை சில வருடங்கள் நிறுத்தி வைத்துள்ளார். இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் பல திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயனை அணுகியுள்ளார்

ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் தீபாவளிக்கு முன்தினம் ரிலீசான பிரின்ஸ் திரைப்படம் ஊற்றி மூழ்கிய நிலையில் இந்த திரைப்படத்தின் தோல்வியை ஈடுகட்ட மாவீரன் திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் பொன்ராம் கதை சொல்ல முற்படும் போதெல்லாம் சிவகார்த்திகேயன் அவரை உதாசினப்படுத்தி வருகிறாராம். இதனை கோடம்பாக்கம் வட்டாரமே ''வளர்த்து விட்டவரை இப்படியா கண்டுக்காமல் இருப்பது'' என பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்