சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்ப ஷூட்டிங் தெரியுமா?

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்ப ஷூட்டிங் தெரியுமா?
X
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் எப்ப ஷூட்டிங் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 27ம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படம் விறுவிறுப்பான அரசியல் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் அரசியல் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும், இப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார் என்றும் தகவல் பரவி வருகின்றன. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை.

இப்படத்தினை தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் இந்த படத்தை தயாரிப்பார் என்றும் தகவல் பரவி வருகிறது. இந்த படம் குறித்தும் முழுமையான தகவல்கள் எதுவும் உறுதியாக தெரியவில்லை. அதே நேரம் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி பூஜையுடன் தொடங்கும் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இப்படம் 2025-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கிறது.

எஸ்.கே.21 படத்தின் பட்ஜெட் சிக்கல்

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.21 படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டதாக கூறப்படுகிறது. திட்டமிட்டதைவிட ரூ.25 கோடி அதிகமாகிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போய் உள்ளாராம் கமல்ஹாசன்.

இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனத்துடன் சேர்ந்து சோனி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த பட்ஜெட் அதிகமானதுக்கு தாங்கள் பொறுப்பாக முடியாது என சோனி நிறுவனம் கைவிரித்துவிட்டதால் கமல்ஹாசன் அப்செட் ஆகி உள்ளாராம்.

இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளத்திலும் கைவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் எப்படி முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 15ம் தேதி வரையிலும் இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கல் விடுமுறை தாண்டி இந்த படப்பிடிப்பு நிறைவடையும் எனவும், சிவகார்த்திகேயன் ஓய்வே எடுக்காமல் ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story