/* */

10 கிலோ எடையைக் குறைத்த CWC ஷிவாங்கி! இப்படித்தான் குறைத்தாராமே!

ஷிவாங்கி உடல் எடையை குறைத்த ரகசியம் இதுதானாம்!

HIGHLIGHTS

10 கிலோ எடையைக் குறைத்த CWC  ஷிவாங்கி! இப்படித்தான் குறைத்தாராமே!
X

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஷிவாங்கி. அவரது குரல் வளத்தால் மிகச் சிறந்த பாடகியாக அந்த நிகழ்ச்சியில் பெயர் பெற்றார்.

நிகழ்ச்சியின் பாதி வரை நன்றாக பாடி பெயர் பெற்றாலும் பிற்பாதியில் சரியாக பர்பாமன்ஸ் செய்யாமல் இறுதிக் கட்டத்தை எட்டமுடியாமல் ஆகிவிட்டது. ஆனாலும் அந்த சீசனில் ரசிகர்களின் ஃபேவரைட் சிங்கராக மாறினார். அதுமட்டுமின்றி காமெடியில் அசத்தி வந்தார். இவரது திறமையை அறிந்த விஜய் தொலைக்காட்சி, குக் வித் கோமாளியில் வாய்ப்பு வழங்கியது.

ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டாக இருந்தவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நல்ல பெயரைப் பெற்று சினிமா வாய்ப்புகள் குவிந்த நிலையில் தொடர்ந்து 3 சீசன்களில் கோமாளியாக கலக்கி வந்தவர், 4வது சீசனில் குக்காக களமிறங்கி அசத்தி வருகிறார்.

இந்த சீசனோடு அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எண்ட் கார்டு போட்டுவிடப்போகிறார். சினிமாவில் பாடுவதற்கும் நடிப்பதற்கும் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் அங்கு அதிக கவனத்தை செலுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா வாய்ப்புகளுக்காக தனது உடல் எடையில் 10 கிலோ வரையில் குறைத்திருக்கிறார். அவர் எப்படி உடல் எடையைக் குறைத்தார் என்பதை பலரும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றனர்.

ஷிவாங்கி முதலில் தேர்ந்தெடுத்தது விளையாட்டுதான். தினமும் தீவிரமாக பேட்மிண்டன் ஆடத் துவங்கியுள்ளார் ஷிவாங்கி. வீட்டிலேயே சின்ன ஒர்க் அவுட்களைச் செய்யத் தொடங்கினார். யோகாவும் அவ்வப்போது செய்து பழகி வருகிறார். ஸ்கிப்பிங் செய்வது இவருக்கு மிகவும் பிடித்த எக்ஸர்சைஸாம்.

ஹோட்டலில் சாப்பிடுவதே இல்லையாம். கிரீன் டீ, சர்க்கரை இல்லாத உணவு பானங்கள், பச்சைக் காய்கறிகள் மட்டுமே எடுத்துக் கொள்வாராம்.

Updated On: 9 Jun 2023 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  4. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  5. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  9. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  10. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி