Maaveeran Teaser சிவகார்த்திகேயனின் மாஸ் சம்பவம்! தெறியான அப்டேட்டுடன் மாவீரன்!

Maaveeran Teaser சிவகார்த்திகேயனின் மாஸ் சம்பவம்! தெறியான அப்டேட்டுடன் மாவீரன்!
X
மாவீரன் படத்திலிருந்து மேலும் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இதனைத் தெரிந்துகொண்டால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் ஜூலை மாதம் இந்த ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக முன்கூட்டியே வெளியாக உள்ளது. | Jailer release date

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சுனில், மிஷ்கின், யோகி பாபு, சரிதா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர இன்னும் சிலரும் சர்ப்ரைஸாக படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். | Maaveeran Cast


சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக உருவான மாவீரன் படத்திலும் சிவகார்த்திகேயன் தலையீடு இருப்பதாகவும் இதனால் இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் பனிப்போர் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. | Maaveeran Release date

ஆனால் அதையெல்லாம் தாண்டி படம் விரைவாக ஷூட்டிங் நடத்தப்பட்டது இப்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. ஜெயிலர் படத்தின் குறுக்கீட்டால் முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதால் படுவிரைவாக படத்தை நிறைவு செய்து வருகிறார் மடோன் அஸ்வின். | Maaveeran Teaser


வரும் ஜூலை 14ம் தேதி இந்த படத்தினை திரைக்கு கொண்டு வரத் திட்டமிட்டு அதற்கான பணிகளை மும்முரப்படுத்தியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணியை முடித்துவிட்டதாகவும் அதனை வீடியோவாக வெளியிட்டும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார். | Maaveeran Dubbing

இந்நிலையில், மாவீரன் படத்தின் டீசர் இந்த வாரம் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து கிடைத்த இந்த தகவலின்படி, வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமை படத்தின் டீசரை வெளியிட இருக்கிறார்கள். அடுத்து இசைவெளியீட்டு விழா ஓரளவுக்கு பெரிதாகவே நடக்கும் என்றும் கூறப்படுகிறது. | Maaveeran Audio Launch


மாவீரன் படத்தைத் தொடர்ந்து அயலான் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் முயற்சியில் இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ராஜ்குமார் பெரியசாமியின் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது. அந்த படம் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளில் வெளியிடும் திட்டத்துடன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. | Sivakarthikeyan kamalhaasan

Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!