தமிழ் சினிமாவில் சகோதரி செண்டிமெண்ட் பாடல் | sister songs in Tamil

Sister songs in Tamil சினிமாக்களில் நிறைய உள்ளன. நடிகர் சூர்யா நடித்த வேல் படத்தில், பாடலாசிரியர் ஹரியின் வரிகளில், சகோதர - சகோதரி பாசத்தை விளக்கும் பாடல் இடம் பெற்றிருக்கும். இப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா, இசை அமைத்திருப்பார்.
ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு
ஓரம் போனதே
அண்ணன் தம்பி பாசம்
அது சோரம் போனதே
பாதையில தென்னம்புள்ள
பார்க்க யாருமில்ல
வேலியில நட்ட செடி
பூவ தேட நாதியில்ல
கண்ணுக்குள்ள விழுந்த
தூசி ஊசியானதே
பச்சை நெல்லு நாத்து
இப்போ பாசியானதே
இவன் நெஞ்சுக்குள்ள
வீரம் கொறஞ்சு போனதே
அட ரெட்ட புள்ள
ஒத்தையா பிரிஞ்சு போனதே
கட்டுத்தறி காள ஒன்னு
கலங்கி போனதே
கட்டு பட்ட உள்ளம் எல்லாம்
நொறுங்கி போனதே
பாசத்துல வந்த சொந்தம்
பாதியில போவதென்ன
நேசத்துல வந்த புள்ள
நெஞ்சம் இப்போ ஆனதென்ன
நம்பி வந்த மனசு இப்போ
நஞ்சு போனதே
தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு
தொலைஞ்சி போனதே
அத்துவிட்ட காயமது
ஆரிப்போனதே
யாரு செஞ்ச பாவம் இது
எந்த நெஞ்சு தாங்குறது
தாய் புள்ள பாசம் இது
எந்த சாமி சேக்குறது
*
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu