சிறுத்தை கார்த்தியின் மகளா இது? நல்ல வளர்ந்துட்டாங்களே!
சிறுத்தை படத்தில் நடித்துள்ள கார்த்தியின் மகள் ரக்ஷனா வா இது?
HIGHLIGHTS

சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி டபுள் ரோலில் நடித்து மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் சிறுத்தை. கார்த்தியுடன் இரண்டாவது ஹீரோவாக சந்தானம் படம் முழுக்க வருவார். அவரின் காமெடிகள் வெடிச்சிரிப்பாக இருக்கும். இப்போதும் ரசிக்கத்தக்க அளவில் எழுதப்பட்டு கார்த்தி, சந்தானம் காம்பினேசனில் வந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கும்.
கார்த்தி ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். பாடல்களும் வேற லெவலுக்கு வெறித்தனமாக ஹிட் ஆகியிருக்கும். இந்த படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் திரும்ப திரும்ப பார்க்கும்படியாக அமைந்திருக்கும்.
இந்த படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா நடித்திருப்பார். இவர் குழந்தையாக மிகவும் கியூட்டாக இருப்பார் என்பதால் பலருக்கும் இவரைப் பிடித்திருந்தது. கதையில் இந்த குழந்தைக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருப்பார் இயக்குநர் சிவா.
ரக்ஷனா இப்போது வளர்ந்து இளம்பெண்ணாக மாறி இருக்கிறார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லேட்டஸ்ட் லுக்கில் ஹீரோயினுக்கான அழகுடன் இருக்கிறார். விரைவில் வாய்ப்பு கிடைத்து ஹீரோயினாக வந்த ஒரு கலக்கு கலக்கவேண்டும் என ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.