சிறகடிக்க ஆசை நாளைய புரோமோ!

சிறகடிக்க ஆசை நாளைய புரோமோ!
X
சிறகடிக்க ஆசை நாளைய புரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரில் ரோகினி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் விஷயம் குடும்பத்திற்கு தெரிந்தால் பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரோகினி தனது கர்ப்பத்தை மறைக்க, மீனா மீது பழியை போட்டுள்ளார்.

இதனால் விஜயாவும் மீனா மீது கடும் கோபத்தில் உள்ளார். இதில் ஸ்ருதி பயமுறுத்த நினைத்து செய்த கலாட்டாவும் மீனா மீது தான் விழுந்துள்ளது. இன்றைய எபிசோடில் வழக்கம் போல் விஜயா மீனாவை திட்டிய காட்சிகள் இடம்பெற்றன.

நிகழ்ச்சியின் இறுதியில் நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் மீனா கிட்சனில் ஸ்டூல் போட்டு மேலே ஏறி ஏதோ எடுத்துக்கொண்டிருந்த போது அதை பார்க்காமல் வந்த விஜயா ஸ்டூலை தள்ளிவிடுகிறார்.

இதனால் மீனா கீழே விழ, அவரை அப்படியே தாங்கி பிடித்துக்கொள்கிறார் முத்து. அந்த காட்சியை ரசிகர்கள் ரசிக்க, அடுத்த ஷாட்டில் விஜயா மீது மிளகாய் தூள், மாவு கொட்டி அவர் கொடூரமாக நிற்கிறார். இந்த கலகலப்பான புரொமோ ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனாவின் நிலை என்னவாகும்? விஜயா மீது தாக்குதல் நடத்தியது யார்? இந்த கேள்விகளுக்கான பதிலை அறிய நாளைய எபிசோடை காண தவறாதீர்கள்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு