தளபதி 68ல் இணைந்த பிரபலம் ..! அதுவும் 18 ஆண்டுகளுக்கு பிறகு!

தளபதி 68ல் இணைந்த பிரபலம் ..! அதுவும் 18 ஆண்டுகளுக்கு பிறகு!
X
தளபதி 68ல் இணைந்த பிரபலம் ..! அதுவும் 18 ஆண்டுகளுக்கு பிறகு!

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய்யுடன் பிரபல நடிகர் இணைந்து நடிக்க இருக்கிறார்.

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட ஷெட்யூலை துருக்கியில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்த சூட்டிங் துவங்கவுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிவரும் நிலையில், டைம் டிராவலை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ளார். மேலும் சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் கமிட்டாகியுள்ளனர்.

இந்தப் படத்தில் தற்போது புதிய வரவாக நடிகர் மற்றும் பாடகர் யுகேந்திரன் இணைந்துள்ளார். படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2005ம் ஆண்டில் திருப்பாச்சி என்ற படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருந்த நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 5வது படம் இது.

யுகேந்திரன் தற்போது நடைபெற்றுவரும் விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக இணைந்து சிறப்பான ஆட்டத்தை கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார்.

யுகேந்திரன் இணைவதன் மூலம் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. டைம் டிராவல் என்ற புதுமையான கதைக்களம், விஜய்யின் முரட்டுத்தனமான நடிப்பும், யுகேந்திரனின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 68 படம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!