அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி

Singer Rajalakshmi supports Aditi shankar-பாடகி ராஜலக்ஷ்மி அவருடைய கணவர் செந்தில் கணேஷ்.
Singer Rajalakshmi supports Aditi shankar -நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் பாடலை அதிதி ஷங்கர் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இப்பாடலை முதன் முதலில் பாடியது பின்னணி பாடகி ராஜலக்ஷ்மி தானாம். ஆனால், அதன்பின் அவர் பாடியதை எடுத்துவிட்டு, அதிதி ஷங்கரை பாட வைத்துள்ளனர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த செய்தி வெளிவந்த பிறகு சமூக வலைத்தளங்களில் அதிதி ஷங்கரின் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில், இந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து பாடகி ராஜலக்ஷ்மி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மதுர வீரன் பாடலை நான் பாடியது உண்மை தான். அதிதி நல்ல பாடுறாங்க. அதனால பாட வெச்சிருக்காங்க. எனக்கு நியாயம் கேட்பதாக நினைத்துக்கொண்டு அதிதியை விமர்சனம் செய்ய வேண்டாம். அதிதியை விமர்சனம் செய்வது வருத்தமா இருக்கு " என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu